வீட்டுக்கடன் நிலுவைத்தொகை, வாடகை தொடர்பில் கூடுதல் உதவிகள் அறிவிப்பு

வீட்டுக்கடன் நிலுவைத்தொகை, வாடகை தொடர்பில் கூடுதல் உதவிகள் அறிவிப்பு

2 mins read
3f123f0b-797c-43a1-8389-978f77158e6a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீட்­டுக் ­க­டன் நிலு­வைத்­தொ­கை­க­ளைத் தாம­த­மா­கச் செலுத்­து­வ­தற்­கான கட்­ட­ணங்­க­ளின் தற்­கா­லிக ரத்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் முதல் டிசம்­பர் வரை­யி­லான மூன்று மாதங்­க­ளுக்கு வீவக வாடகை வீடு­களில் குடி­யி­ருப்­போ­ருக்­கான வாடகை பாதி­யா­கக் குறைக்­கப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தெரி­வித்­தார்.

வீவக வாடகை வீடு­களில் வசிக்­கும் குடும்­பங்­க­ளுக்கு, வாட­கை­யைத் தாம­த­மா­கச் செலுத்­து­வ­தற்­கான கட்­ட­ணங்­களும் 2021 மார்ச் வரை நிறுத்தி வைக்­கப்­படும்.

கொவிட்-19 நோய்ப் பர­வல், பொரு­ளி­யல் மீது தாக்­கத்தை ஏற்­படுத்தி வரும் நிலை­யில், வீவக வீட்­டு­ரி­மை­யா­ளர்­களும் வாட­கை­தா­ரர்­களும் அதனை எதிர்­கொள்ள உத­வி­யாக இந்­தக் கூடு­தல் உதவி நட­வ­டிக்­கை­களை அமைச்­சர் லீ தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யாக அறி­வித்­துள்­ளார்.

"இப்­போ­தைய சிர­ம­மான பொரு­ளி­யல் சூழல் இன்­னும் சில காலத்­திற்கு நீடிக்க வாய்ப்­புள்­ளது. இத­னால், சில குடும்­பங்­கள் தங்­க­ளது வீட்­டுக் கட­னைத் திருப்­பிச் செலுத்து­வ­தில் சிர­மப்­ப­டு­கின்­றன," என்­றார் திரு லீ.

இவ்­வாண்டு ஏப்­ரல் முதல் ஆகஸ்ட் வரை, வீவக வழங்­கிய நிதி­யு­தவி நட­வ­டிக்­கை­கள் மூலம் கிட்­டத்­தட்ட 2,500 குடும்­பங்­கள் பய­ன­டைந்­தன.

வீட்­டுக்­க­டன் தவ­ணைத்­தொ­கை­க­ளைச் செலுத்­து­வதைத் தள்­ளிப்­போ­டு­வது, செலுத்த வேண்­டிய தவணைத்தொகை­யின் அள­வைக் குறைப்­பது போன்­றவை அதில் அடங்­கும்.

"நிலை­மை­யைத் தொடர்ந்து அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து, நிதிப் பிரச்­சி­னை­களில் இருக்­கும் குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வித­மாக எங்­க­ளது நட­வ­டிக்­கை­களை மறு­ஆய்வு செய்­வோம்," என்று அமைச்­சர் லீ கூறி­யுள்­ளார்.

வங்­கிக் கடன் பெற்று வீவக வீடு வாங்­கி­யுள்­ளோ­ருக்­கான ஆத­ரவு நட­வ­டிக்­கை­கள் குறித்து சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் அறி­விக்­கும் என்­றும் அவர் தெரி­வித்து இருக்­கி­றார்.

நிதிப் பிரச்சினையிலுள்ள வீட்டு­ உரி­மை­யா­ளர்­கள் உதவி தேவைப்­பட்­டால் தங்­க­ளது வட்­டா­ரத்­தில் உள்ள வீவக கிளையை அணு­கும்­படி ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.