மூன்றாம் காலாண்டில் தனியார் வீட்டு விலை கிடுகிடு உயர்வு

சிங்­கப்­பூ­ரின் நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டத்­துக்­குப் பிந்­தைய இரண்­டாம் கட்டத் தளர்வு நட­வடிக்கைகள் நடப்பிற்கு வந்­த­தை அடுத்து தனி­யார் வீட்டு விலை­வேக­மாக உய­ரத் தொடங்­கியது.

இதன் தொடர்­பில் மூன்­றாம் காலாண்­டில் தனி­யார் வீட்டு விலைக் குறி­யீடு 0.8% உயர்ந்­த­தாக நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் முன்­னோடி புள்­ளி­வி­வ­ரக் கணக்கு தெரி­விக்­கிறது. ஒப்­பு­நோக்க, இரண்­டாம் காலாண்­டின் தனி­யார் வீட்டு விலைக் குறி­யீடு 0.3% மட்­டுமே உயர்ந்­த­தாக ஆணை­யம் கூறு­கிறது.

ஆண்­டின் முதல் காலாண்­டில் தனி­யார் வீட்டு விலைக் குறி­யீடு 1% வீழ்ச்சி கண்ட நிலை­யில் ஆணை­யம் வெளி­யிட்­டுள்ள இரண்­டாம், மூன்­றாம் காலாண்டு விலைக் குறி­யீட்டுப் புள்­ளி­வி­வ­ரங்­கள் விலை­யேற்­றத்தை காண்­பிப்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

ஆண்டு அடிப்­ப­டை­யில் பார்த்­தால், தனி­யார் வீட்டு விலைக் குறி­யீடு 0.1% கூடி­யுள்­ள­தாக ஆணை­யம் கூறு­கிறது. சொத்து முக­வர்­கள் சொத்து வாங்­கு­வ­தற்­கான விருப்ப உரி­மைப் பத்­தி­ரத்தை ஒன்­றுக்கு மேற்­பட்டு பல­முறை வழங்­கும் நட­வ­டிக்­கையை ஆணை­யம் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று தடை செய்­ததை அடுத்து இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் வந்­தி­ருப்­பது நினை­வு­கூ­ரத்­தக்­கது.

சிங்­கப்­பூ­ர் மிக மோச­மான பொரு­ளி­யல் வீழ்ச்­சியை சந்­தித்து வரும் வேளை­யி­லும் அதன் தொடர்ச்­சி­யாக பலர் வேலையிழந்­துள்ள நிலை­யி­லும் நிதி நட­வடிக்­கை­களில் பொது­மக்­கள் முன்­யோ­ச­னை­யு­டன் செயல்­படும் போக்கை இது ஊக்­கு­விக்­கும் நோக்­கம் கொண்­டது என்று கூறப்­ப­டு­கிறது.

இதன்­மூ­லம், சொத்து வாங்க எண்­ணு­வோர், தங்­கள் சக்­திக்கு மீறிய விலை­யில் சொத்து வாங்க முனை­வதை ஆணை­யம் தடுக்க எண்­ணு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

அத்­து­டன், கடும் பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யி­லும் வீடு வாங்கு­வதில் மக்­க­ளி­டையே தென்­படும் ஆர்­வம் சந்தை நில­வ­ரத்தை சரி­வர பிர­தி­ப­லிக்­கா­மல் போக­லாம் என சொத்துச் சந்தை நிபு­ணர்­கள் கருத்­து­ரைக்­கின்­ற­னர்.

ஆணை­யத்­தின் புதிய வழி­காட்டி நெறி­மு­றை­க­ளின்­படி, சொத்து முக­வர்­கள் ஒரு­வ­ருக்கு வழங்­கும் விருப்ப உரி­மைப் பத்­தி­ரம் காலா­வ­தி­யா­ன­பின் அதே நப­ருக்கு அடுத்த 12 மாதங்­களுக்­குள் அதே சொத்து தொடர்­பாக வாங்­கு­வ­தற்­கான விருப்ப உரி­மைப் பத்­தி­ரத்தை மீண்­டும் வழங்க முடி­யாது. இதன்­வழி, ஒரு குறிப்­பிட்ட சொத்தை வாங்­கு­வ­தா வேண்­டாமா எனத் தடு­மா­று­ம் நிலை­யில் இருப்­ப­வர்­களை இது ஒதுக்­கி­வி­டும் என்று சொத்து சந்தை ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!