சட்டத்துறையில் தொழில்நுட்பப் பயன்பாடு: புதிய பத்தாண்டு திட்டம்

சட்­டத்­து­றை­யில் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விக்­க­வும் சட்ட மாண­வர்­கள் மின்­னி­லக்­கத் திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்ள அதிக வாய்ப்­பு­களை வழங்­க­வும் புதிய பத்­தாண்டு திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நேற்று நடந்த ‘டெக்லா.ஃபெஸ்ட்’ எனும் வரு­டாந்­தி­ரக் கருத்­த­ரங்­கில் ‘சட்­டத்­து­றைத் தொழில்­நுட்ப, புத்­தாக்­கத் திட்­டம்’ எனும் அந்­தத் திட்­டத்தை சட்ட இரண்­டாம் அமைச்­சர் எட்­வின் டோங் அறி­மு­கம் செய்­தார்.

சட்­டத்­து­றை­யில் புத்­தாக்­கம், தொழில்­நுட்­பப் பயன்­பாடு ஊக்­கு­விப்பு, அடுத்த பத்­தாண்­டு­களில் சிங்­கப்­பூ­ரின் சட்­டத்­துறை வளர்ச்சி ஆகி­யவை தொடர்­பில் சட்ட அமைச்சு வகுத்­துள்ள திட்­டங்­கள் அதில் இடம்­பெற்­றுள்­ளன.

சட்ட நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­க­ம­ய­மா­த­லுக்கு ஆயத்­த­மாக இருக்­கின்­ற­னவா என்­பதை மதிப்­பி­ட­வும் அவை பயன்­ப­டுத்­த­வல்ல தொழில்­நுட்­பங்­களை அடை­யா­ளம் காண­வும் ஏது­வாக தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­து­ட­னும் சட்­டத் துறை பங்­கா­ளி­க­ளு­ட­னும் இணைந்து பணி­யாற்­று­வ­தும் அதில் அடங்­கும்.

தகு­தி­யுள்ள வழக்­க­றி­ஞர்­கள் தங்­க­ளது நிபு­ணத்­துவ மேம்­பாட்­டின் ஒரு பகு­தி­யாக தங்­க­ளது தொழில்­நுட்­பத் திறன்­களை மேம்­படுத்­திக்­கொள்­வ­தற்­கான திட்­டங்­களும் அதில் இடம்பெற்றுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!