விபத்து: தூக்கி வீசப்பட்ட இருவர்

1 mins read
66d50d35-1839-4948-b6c6-265fa446f332
-

பாய லேபார் சாலை-கேலாங் சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் பிற்பகல் டாக்சி மோதி, ஓர் ஆணும் பெண்ணும் தூக்கி வீசப்பட்டனர். சிவப்பு விளக்கு எரிந்தபோதும், அதைக் கவனத்தில் கொள்ளாமல் அந்த 17 வயதுப் பெண்ணும்

24 வயது ஆடவரும் சாலையில் நடந்ததையும் அப்போது சில்வர்கேப் டாக்சி ஒன்று அவர்கள் மீது மோதியதையும் 'எஸ்ஜி ரோடு விஜிலன்ட்' ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி காட்டியது. இருப்பினும், அந்த ஆடவர் உடனடியாக எழுந்து, தம்முடன் வந்த பெண்ணுக்கு என்னவானது எனக் கண்டார். அந்தப் பெண் சுயநினைவுடன் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவம் குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.