எம்.பி.க்களுக்கு டான் சுவான் ஜின் வேண்டுகோள்

நாடா­ளு­மன்­றத்­தில் ஒத்­தி­வைப்­புத் தீர்­மா­னம் மூலம் பிரச்­சி­னை­களை எழுப்­பு­வ­தற்­குப் பதி­லாக உறுப்­பினர்­கள் வேறு பல வழி­க­ளி­லும் பேச­லாம் என்று நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின் தெரி­வித்­து இருக்கிறார். எடுத்­துக்­காட்­டாக, அவர்­கள் முக்­கி­ய­மான தீர்­மா­னம் மூல­மா­கவோ அல்­லது நாடா­ளு­மன்­றத்­தில் கேள்­வி­கள் கேட்­ப­தன் மூல­மா­கவோ பிரச்­சி­னை­க­ளைப் பற்­றிப் பேச­லாம் என்று அவர் தமது ஃபேஸ்புக் பதி­வில் கூறி­னார்.

குற்­ற­வி­யல் நீதித் துறை­யில் சமத்­து­வத்தை மேம்­ப­டுத்­து­வது குறித்து பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­வர் சில்­வியா லிம்­மின் ஒத்தி­ வைப்­புத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்ற விவா­தத்­திற்­கான வாக்­கெ­டுப்­பில் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்று செவ்­வாய்க்கிழமையன்று திரு டான் வெளிப்­ப­டுத்­தி­யதை அடுத்து, கடந்த வாரம் இந்தப் பிரச்­சினை கவ­னத்தை ஈர்த்­தது.

முன்­னாள் இந்தோனீசிய பணிப்­பெண் பார்த்தி லியானி சம்­பந்­தப்­பட்ட உயர் நீதி­மன்ற வழக்­கைத் தொடர்ந்து இந்தப் பிரச்­சி­னையை நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்ப நாடாளு­மன்ற உறுப்­பி­னர் திரு­வாட்டி சில்­வியா லிம் நம்­பி­ இ­ருந்­தார். தமது முன்­னாள் முத­லா­ளி­யான பிர­பல தொழி­ல­தி­பர் லியூ முன் லியோங்­கின் குடும்­பத்­தி­ட­மி­ருந்து $34,000 மதிப்­புள்ள பொருட்­க­ளைத் திருடி­ய­தா­க குமாரி பார்த்தி குற்­றம் சாட்­டப்­பட்­டார்.

உயர்­நீ­தி­மன்­றத்­தால் அவர் விடு­விக்­கப்­பட்ட பின்­னர், குற்­ற­வி­யல் நீதித்­து­றை­யில் வசதி குறைந்­த­வர்­கள் நடத்­தப்­ப­டு­வது குறித்து அந்த நீதி­மன்­றம் கேள்வி எழுப்­பி உள்­ளது.

கடந்த செவ்­வா­யன்று நடந்த வாக்­கெடுப்­பில் நீ சூன் குழுத்­தொ­குதி எம்.பி. லுயிஸ் இங்கின் ‘மற்றவர் புகைப்பதன் மூலம் வெளியாகும் புகை’ குறித்த ஒத்தி­வைப்பு தீர்­மா­னம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தாக திரு டான் கூறி­னார்.

தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் முன் வை, குற்­ற­வி­யல் நீதித்­துறை தொடர்­பான பிரச்­சி­னையைவிட புகைப் பிரச்சினை முக்­கி­ய­மா­ன­தாகக் கரு­தப்­பட்­டது ஏன் என்று சமூக ஊட­கத்தில் கேள்வி எழுப்­பி­னார்.அன்­றைய முக்­கி­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­காத நாடா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­கள் குறித்து தமது சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் தொகு­தி­ இல்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கேள்வி எழுப்­பு­வார்­கள் என்­றார் அவர்.

பொது­வாக, நாடா­ளு­மன்ற அமர்­வின் இறு­தி­யில், அர­சாங்­கம் பொறுப்­பேற்க வேண்­டிய ஒரு விஷ­யம் குறித்துப் பேச விரும்­பும் நாடாளு­மன்ற உறுப்­பி­னர் ஒத்­தி­வைப்புத் தீர்­மா­னத்தை தாக்­கல் செய்­வார். ஒன்­றுக்கு மேற்­பட்ட எம்­.பி.க்­கள் ஒத்­தி­வைப்புத் தீர்­மா­னத்­தைத் தாக்­கல் செய்­தால் வாக்­கெ­டுப்பு நடை­பெ­றும். தேர்வு செய்­யப்­ப­டா­த­வர்­கள் மற்­றொரு நாளுக்கு மீண்­டும் சமர்ப்­பிக்­க­லாம்.

குமாரி பார்த்தியின் வழக்கு தொடர்­பாக கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான கேள்விகள் நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்­டுள்­ளன என்று திரு டான் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!