அமைச்சுநிலை அறிக்கையில் புது உதவி திட்டங்கள் இராது

அறிவிக்கப்பட்ட ஆதரவு நடவடிக்கைகளுக்கான நிதிவளம் பற்றி துணைப் பிரதமர் விளக்குவார்

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், நாளை நாடா­ளு­மன்­றத்­தில் அமைச்சு ­நிலை அறிக்கை ஒன்­றைத் தாக்கல் செய்­கி­றார். ஆனால் அதில் புதிய கொவிட்-19 ஆத­ர­வுத் திட்டங்­கள் எது­வும் இடம்­பெற்று இருக்­காது.

ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்­டு உள்ள ஆத­ர­வுத் திட்­டங்­க­ளுக்கு வளங்­கள் எப்­படி ஒதுக்­கப்­படும் என்­பது பற்றி அவர் விளக்­கு­வார்.

திரு ஹெங் ஃபேஸ்புக்­கில் நேற்று இத­னைத் தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நாளை துணை நிதி ஆதார மசோதா தாக்­கல் செய்­யப்­படும். அதன் தொடர்­பி­லான விவ­ரங்­க­ளைத் தெரி­விப்­பதே தனது அமைச்சுநிலை அறிக்­கை­யின் முக்­கிய நோக்­கம் என்றார் அவர்.

நாளை தாக்­கல் செய்­யப்­ப­ட உள்ள மசோதா இந்த ஆண்­டில் தாக்­க­லா­கும் இத்­த­கைய மூன்றாவது மசோதா ஆகும்.

கொவிட்-19 கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள பொரு­ளி­யல் பாதிப்­பு­களில் இருந்து நிறுவனங்­களும் ஊழி­யர்­களும் மீண்­டு­வர உத­வுவதற்­காக ஆகஸ்ட் 17ஆம்­ தேதி பல ஆத­ர­வுத் திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்­டன.

அவற்­றுக்­கான நிதி வளங்­களை புதிய மசோதா ஒதுக்­கித்­த­ரும். சுமார் $8 பில்­லி­யன் மதிப்­புள்ள அந்த ஆத­ரவு நட­வடிக்கைகளை­யும் மசோ­தா­வை­யும் நாடாளுமன்றம் விவா­திக்­கும்.

“கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் $100 பில்­லி­யன் உறுதி தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.

“அதில் பெரும்­பா­லான பங்­கைப் பயன்­ப­டுத்தி ஊழி­யர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­களுக்கும் ஆதரவு அளிக்­க­வும் பல­ரை­யும் எட்­ட­வும் மேம்­பாட்டுத் திட்­டங்­களை நடை­முறைப்­ப­டுத்­த­வும் நானும் எனது குழு­வி­ன­ரும் முழு கடப்­பாடு கொண்­டுள்­ளோம்,” என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

அந்த ஆத­ர­வுத் திட்­டங்­களை நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­களும் நன்கு பயன்­ப­டுத்­திக்கொள்­வர் என அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

துணைப் பிர­த­மர், வெள்­ளிக்­கிழமை சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களின் பேரா­ளர்­க­ளை­யும் தொழிற்­சங்­கத் தலை­வர்­க­ளை­யும் வாழ்க்­கைத் தொழில் பயிற்­று­விப்­பா­ளர்­களை­யும் தொழிற்­சங்க இயக்கத்தின் தலை­வர் இங் சீ மெங்­கு­டன் சேர்ந்து சந்­தித்­தார்.

அந்­தக் கூட்­டங்­கள் பற்றி கருத்து தெரி­வித்த துணைப் பிர­த­மர், வேலை தேடு­வோ­ரும் நிறு­வனங்­களும் எதிர்­நோக்­கும் பாதிப்பு­கள் பற்றி நன்கு புரிந்­து­கொள்ள முடிந்­தது என்­றார்.

வரும் மாதங்­களில் இடம்­பெறக்­கூடிய ஒத்­து­ழைப்­புக்­கான வாய்ப்­பு­கள், அடுத்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­துக்­கான யோச­னைகள் ஆகி­ய­வற்­றைத் தெரிந்­து­கொள்­ள­வும் அவை உத­வி­ய­தாகவும் திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!