தேசிய சேவையாளரின் குடும்பத்தினருக்கு சலுகை

தேசிய சேவையாளரின் குடும்பத்தினருக்கு சலுகை

1 mins read
c8012080-d0f8-4009-9254-ae690bc5435e
தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, (சிவப்பு உடை) சாஃப்ரா ஈசூன் உள்ளரங்கில் துப்பாக்கியால் ஓர் இலக்கை நோக்கி குறி வைக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தயார்­நிலை தேசிய சேவை­யா­ளர்­க­ளின் குடும்­பத்­தி­னர், சாஃப்ரா மற்­றும் ஹோம்­டீம்­என்­எஸ் ஆகிய மன­ம­கிழ் மன்­றங்­களில் இல­வ­ச­மாக உறுப்­பி­ன­ராக வாய்ப்பு கிடைக்­கும். 2வது மற்­றும் அடுத்­த­டுத்த குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்­குக் கட்­ட­ணம் ரத்து செய்­யப்­படும்.

சாஃப்ரா மற்­றும் ஹோம்­டீம்­என்­எஸ் மன­ம­கிழ் மன்­றங்­க­ளுக்­கான இந்­தப் புதிய குடும்ப உறுப்­பி­னர் திட்­டத்­தின்­படி, தேசிய சேவை­யா­ள­ரின் வாழ்க்­கைத் துணை­யும் அவ­ரின் பிள்­ளை­களும் மட்­டும் உறுப்­பி­ன­ரா­கச் சேர­லாம்.

இதன் மூலம் 630,000 பேருக்­கும் அதி­க­மான தேசிய சேவை­யா­ளர்­கள் நன்மை அடை­வர் என்று எதிர்­பார்க்­கப்­படுகிறது.

புதிய முறை­யின் கீழ், அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை ஒவ்­வோர் உறுப்­பி­னர் பதி­வுக்­கும் $10 நிர்­வா­கக் கட்­ட­ணத்­தை­யும் செலுத்­த­வேண்­டாம்.

தற்காப்பு மூத்த துணை அமைச்சரும் சாஃப்ரா தலைவருமான ஸாக்கி முகம்மது, நேற்று சாஃப்ரா ஈசூன் மனமகிழ் மன்றத்துக்குச் சென்றார். "இந்த கொவிட்-19 தொற்று காலத்தில் குடும்பத்தினர் ஒன்றாக பொழுதைக் கழிக்க இடம் தேடுகிறார்கள்.

"தேசிய சேவையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சாஃப்ரா மனமகிழ் மன்ற வசதிகளை அனுபவிக்கலாம்," என்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.