செந்தோசா கடற்கரைகளுக்குச் செல்ல 17ஆம் தேதி முதல் முன்பதிவு தேவை

செந்தோசா கடற்கரைகளுக்குச் செல்ல 17ஆம் தேதி முதல் முன்பதிவு தேவை

1 mins read
cf07f9ee-2dc9-476c-ab68-474acfa64908
செந்தோசாவின் பலாவான் கடற்கரைகளில் நேற்று ஏராளமானவர்கள் கூடினர். ஏற்கெனவே அங்கு நடைமுறையில் உள்ள பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்டுப்பாடுகளுடன் முன்பதிவு முறையும் நடப்புக்கு வருகிறது. படத்தில் நேற்று பலாவான் கடற்கரையில் பொழுது போக்கியவர்கள். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக செந்தோசா தீவின் கடற்கரைகளுக்கு வார இறுதி, விடுமுறை நாள்கள் உள்ளிட்ட உச்ச நேரத்தில் செல்ல இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து முன்பதிவு செய்ய வேண்டும். ஏழு நாட்களுக்கு முன்பே பதிவு செய்யலாம்.

அக்டோபர் 10ஆம் தேதி முதல் https://www.sentosa.com.sg/beachreservations என்ற இணையத் தளத்தில் பதிவு செய்யலாம்.

வருகையாளர்கள் - காலை 8 மணி - பகல் 1 மணி வரை அல்லது பிற்பகல் 2 மணி - இரவு 7 மணி வரை ஆகிய இரு நேர ஒதுக்கீட்டை தேர்வு செய்யலாம்.

ஒவ்வொரு பதிவிலும் ஐந்து பேரின் பெயர்கள் இடம்பெறலாம். தேர்ந்தெடுத்த கடற்கரைப் பகுதி, நேரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை பதிவுசெய்வோர் பெறுவார்கள். அங்கு செல்லும்போது வருகையாளர்கள் நுழைவுக் கூடத்தில் சரிபார்ப்புக்காக உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை வழங்க வேண்டும்.

தஞ்சோங், பலாவான், சிலோசோ ஆகிய மூன்று கடற்கரைகளும் ஜூலை மாதத்திலிருந்து மொத்தம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு இடைவெளியுடன் 100 முதல் 350 பேர் வரையில் கூடலாம்.