மூன்றாவது கட்ட தளர்வு நடவடிக்கையின் திறப்பு பற்றிய மேல் விவரங்களை அமைச்சர்நிலை பணிக்குழு அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என்று துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார்.
மூன்றாவது தளர்வுக் கட்டத்திற்கு நகர்ந்து செல்வதற்கான உத்தேச காலவரிசை இந்தப் பெருந்திட்டத்தில் உள்ளடங்கும் என்று திரு ஹெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிராக சிங்கப்பூரின் போரின் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அரசாங்க செலவினக் கொள்கை, தொடர்பிலான அமைச்சர்நிலை அறிக்கையை திரு ஹெங் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
தளர்வு நடவடிக்கைகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும் இரண்டாம் கட்டத் தளர்வு நடவடிக்கை பல மாதங்களுக்கு நீடிக்கும் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரையில் கிருமிப்பரவலுக்கு இடையே புதிய இயல்நிலையைத் தொடங்குவதே மூன்றாவது கட்ட தளர்வு நடவடிக்கை.
“கொவிட்-19க்கு எதிரான எங்களது போராட்டத்தில் நமது நிலைமை தற்போது சீராக இருந்தாலும் விழிப்புடன் இருக்கவேண்டும்.