7.6 மில்லியன் முகக்கவசங்கள் இலவசமாக விநியோகம்

7.6 மில்லியன் முகக்கவசங்கள் இலவசமாக விநியோகம்

1 mins read
234b11e7-1765-4052-9aff-91e1115ae507
-

தெமாசெக் அறநிறுவனம் தேசிய அளவில் இலவசமாக வழங்கிய இரண்டாவது முகக்கவச விநியோகத் திட்டத்தின்கீழ், ஏறத்தாழ 7.6 மில்லியன் முகக்கவசங்களைக் குடியிருப்பாளர்கள் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்ற முகக்கவச விநியோகத் திட்டத்தில் சுமார் 3.8 மில்லியன் குடியிருப்பாளர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களைப் பெற்றுக் கொண்டனர். ஒவ்வொருவருக்கும் இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

மக்கள் கழகம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் போன்றவற்றைச் சேர்ந்த தொண்டூழியர்கள் முகக் கவசங்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தெமாசெக் அறநிறுவனம் கடந்த ஜூன், ஜூலை மாதம் நடத்திய முதல் முகக்கவச விநியோகத் திட்டத்தின்கீழ் 9.3 மில்லியன் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன. அவற்றில் 300,000 முகக்கவசங்கள், தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.