ஹெங்: விமான போக்குவரத்து மையமாக சிங்கப்பூர் மிளிரும்

கொவிட்-19 சூழலில் பாதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்துக்கான அனைத்துலக மையம் என்ற பெயரையும் அனைத்துலக இணைப்பையும் உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகளை சிங்கப்பூர் இரட்டிப்பாக்கியிருக்கிறது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய பயணம் மீண்டும் தொடங்கும் போது அனைத்துலக மையம் எனும் நிலையை சிங்கப்பூர் மீண்டும் பெறும் என உறுதியளித்த திரு ஹெங், தொழில்நுட்பம், புத்தாக்கத்தில் உலகளாவிய-ஆசிய சங்கமமாக நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் பாடுபாடும் என்றார்.
போக்குவரத்து அமைச்சரான ஓங் யீ காங் இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார்.

சிங்கப்பூர் கடல் வழித் தொடர்புகளையும் மீண்டும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றார். கப்பல் போக்குவரத்துத் திறன்களை மேம்படுத்துதல், வர்த்தக வசதி ஒப்பந்தங்களை வழங்குதல், நாடு முழுவதும் முக்கிய கப்பல் பாதைகளை அமைத்தல் போன்ற முயற்சிகள் மூலம் சிங்கப்பூரின் கடல் நிலையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவுபடுத்தும் என்று துணை பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!