‘கடும் குற்றங்களைத் தடுக்கும் மரண தண்டனை’

சிங்­கப்­பூ­ரில் ஒரு சில கடு­மை­யான குற்­றச்­செ­யல்­க­ளைத் தடுப்­ப­தில் மரண தண்­டனை முக்­கிய பங்­காற்­று­வ­தைக் கடந்த பல ஆண்­டு­க­ளாக நடத்­தப்­பட்ட ஆய்­வு­கள் மற்­றும் புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­வ­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

மரண தண்­ட­னை­யைத் தவிர்க்க, போதைப்­பொ­ருட்­க­ளைக் கடத்­து­ப­வர்­கள் குறைந்த அள­வில் அவற்றை கடத்­து­வ­தாக உள்­துறை அமைச்சு நடத்­திய ஆய்வு ஒன்­றில் கண்­ட­றி­யப்­பட்­டதை அவர் சுட்­டி­னார். கடு­மை­யான குற்­றங்­க­ளுக்கு மரண தண்­டனை விதிப்­பது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து கொள்­ளைச் சம்­ப­வங்­களில் ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது, ஆட்­க­டத்­த­லில் ஈடு­ப­டு­வது போன்ற குற்­றச்­செ­யல்­கள் பெரி­தும் குறைந்­தி­ருப்­ப­தாக அமைச்­சர் சண்­மு­கம் கூறி­னார்.

பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜேமஸ் லிம் கேட்ட கேள்­விக்கு அளித்த எழுத்து­பூர்வ பதி­லில் திரு சண்முகம் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

குற்­ற­வா­ளி­க­ளுக்கு எந்த மாதி­ரி­யான தண்­டனை விதிப்­பது என்­பது குறித்து முடி­வெ­டுப்­ப­தில் குற்­ற­வா­ளி­கள், பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் ஆகி­யோ­ரது உரி­மை­கள் கருத்­தில்­கொள்­ளப்­படும் என்­றார் அமைச்­சர். பாது­காப்­பான சூழ­லில் வாழ விரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் உரி­மை­களும் கருத்­தில் கொள்­ளப்­படும் என்­றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!