இளையரின் மரணத்திற்கு காரணமானோருக்குச் சிறை

இளையரின் மரணத்திற்கு காரணமானோருக்குச் சிறை

1 mins read
87fa4849-3e18-420f-b9df-7519a926cb6a
ரயன் சேவியர் டே சீட் சூங் (இடது), லாரன்ஸ் லிம் பெக் பெங் ஆகிய இருவருக்கும் நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

2016ஆம் ஆண்டு ஈசூன் வட்­டா­ரத்­தில் ஆட­வர் ஒரு­வ­ரைத் தாக்கி அவ­ரது மர­ணத்­திற்­குக் கார­ண­மாக இருந்­த­ ரயன் சேவி­யர் டே சீட் சூங் என்பவ­ருக்கு நேற்று நான்கு ஆண்டு சிறைத்­தண்டனை விதிக்­கப்­பட்­டது.

திரு ஷான் இக்­னே­ஷஸ் ரோட்­ரி­கேஸ் எனும் 26 வயது இளை­ய­ருக்கு வேண்­டு­மென்றே கடு­மை­யான காயம் விளை­வித்­த­தாக 24 வயது டே மீதான குற்­றம் நிரூ­ப­ண­மா­னது. 2016ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி, டேயால் தாக்­கப்­பட்­டதை அடுத்து திரு ரோட்­ரி­கேஸ் உயி­ரி­ழந்­தார்.

டே இந்­தக் குற்­றத்­தைப் புரிய அவ­ரது வளர்ப்­புத் தந்தை 59 வயது லாரன்ஸ் லிம் பெக் பெங், டேவுக்கு உதவியதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அவர் மீதான குற்­றம் நிரூ­ப­ண­மா­னது. லிம்­முக்கு நேற்று எட்டு மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

டேவுக்­கும் லிம்­முக்­கும் தண்­டனை விதித்த மாவட்ட நீதி­பதி டான் ஜென் சு, திரு ரோட்­ரி­கேஸ் மீது தொடுக்­கப்­பட்ட தாக்­கு­தல் கடு­மை­யாக இருந்­த­தா­கக் கூறி­னார்.

என்­றா­லும், குற்­ற­வாளி­க­ளான அவ்­வி­ரு­வ­ருக்­கும் அவர்­க­ளது குடும்­பத்­தா­ருக்­கும் திரு ரோட்­ரி­கேஸ் தொல்லை கொடுத்து வந்­ததை நீதி­பதி டான் சுட்­டி­னார்.

போலி­சா­ரி­டம் 50க்கும் அதி­க­மான முறை புகார் அளித்­த­போதும் தேசிய சேவை­யா­ள­ரான திரு ரோட்­ரி­கேஸ் புளோக் 279 ஈசூன் ஸ்தி­ரீட் 22ல் வசித்த டேயின் வீட்­டுக்கு அடிக்­கடி சென்று தொந்­த­ரவு கொடுத்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.