தகுதியுள்ள 10ல் 9 பேருக்கு ஆட்குறைப்புப் பலன்கள் கிட்டின

தகுதியுள்ள 10ல் 9 பேருக்கு ஆட்குறைப்புப் பலன்கள் கிட்டின

2 mins read
bf40ac4d-81f0-4d50-9ddc-3e3a21a7f292
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த ஆறு மாதங்­களில் ஆட்­குறைப்பு செய்­யப்­பட்­டோ­ரில் தகு­தி­ உடைய பத்­துப் பேரில் கிட்­டத்­தட்ட ஒன்­பது பேருக்கு வழங்­கு­தொகை கிடைத்­த­தாக மனி­த­வள அமைச்­சின் தர­வு­கள் கூறு­கின்­றன.

கிட்­டத்­தட்ட 84 விழுக்­காட்­டி­ன­ருக்கு அவர்­கள் வேலை செய்த ஒவ்­வோர் ஆண்­டிற்­கும் குறைந்­தது இரு வார ஊதி­யம் வழங்­கப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

கடந்த ஏப்­ரல் முதல் செப்­டம்­பர் வரை தமது அமைச்­சுக்­குக் கிடைக்­கப் பெற்ற ஆட்­கு­றைப்பு அறி­விப்பு­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் பெறப்­பட்­ட­தாக திரு­வாட்டி டியோ குறிப்­பிட்­டார்.

வேலை இழந்த ஊழி­யர்­களில் கிட்­டத்­தட்ட மூவ­ரில் இரு­வர் ஆட்­கு­றைப்­புப் பலன்­க­ளைப் பெறத் தகுதி பெற்­றி­ருந்­த­னர் என்­றும் அவர் சொன்­னார். ஒரு நிறு­வ­னத்­தில் குறைந்­தது ஈராண்டு காலம் பணி­யாற்­றி­ய­வர்­கள் அதற்­குத் தகுதி­யு­டை­ய­வர்­கள்.

தகு­தி­பெ­றாத மற்ற ஊழி­யர்­களி­லும் கிட்­டத்­தட்ட பாதிப் பேருக்கு ஆட்­கு­றைப்பு வழங்­கு­தொகை கிடைத்­த­தாக அமைச்­சர் டியோ கூறி­னார்.

ஆட்­கு­றைப்­புச் சம்­ப­வங்­கள் தொடர்­பான தமது அமைச்­சின் விசா­ர­ணை­யின் அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது, பொது­வா­கவே நிறு­வ­னங்­கள் தங்­க­ளது ஊழி­ய­ர் அ­ணி­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளைத் தக்க வைத்­தி­ருக்க தீவிர முயற்­சி­கள் எடுத்­தி­ருப்­பது தெரி­ய­வந்­த­தாக அவர் சொன்­னார்.

ஆட்­கு­றைப்பு தவிர்க்­க­மு­டி­யாத பட்­சத்­தில், சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­அமைப்பும் தேசிய தொழிற்­சங்க காங்­கிரசும் வேலை பெற உதவி வழங்குவதாக அமைச்­சர் கூறினார்.

"சிங்­கப்­பூ­ரர்­கள் வேலை­யில் நீடித்­தி­ருக்க உதவ எடுக்­கப்­படும் முயற்­சி­க­ளு­டன் அவர்­க­ளுக்­குக் கல்வி, பயிற்சி, சுகா­தா­ரப் பரா­மரிப்பு போன்ற வழி­க­ளி­லும் கூடு­தல் உதவி­யும் ஆத­ர­வும் வழங்­கப்­ப­டு­கின்றன. வேலை­ந­லன், முதி­யோர் ஆத­ரவு போன்ற திட்­டங்­கள் குடி­மக்­கள் வேலை செய்­யும்­போ­தும் ஓய்­வுக்­கா­லத்­தின்­போ­தும் அவர்­களின் வரு­மா­னத்தை உயர்த்த உத­வு­கின்­றன," என்­றார் அவர்.

அத்­து­டன், ஆட்­கு­றைப்பு செய்ய நேர்ந்­தா­லும் சிங்­கப்­பூ­ரர்­களை மூலா­தா­ர­மா­கக் கொண்ட ஊழி­ய­ர­ணி­யைக் கொண்­டி­ருக்­கும்­படி நிறு­வனங்­களை முத்­த­ரப்பு ஆலோ­சனைக் குழு வலி­யு­றுத்தி வரு­வதாக திரு­வாட்டி டியோ கூறி­னார்.

இவ்­வாண்­டின் முற்­பா­தி­யில், சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­க­ளைப் பொறுத்­த­மட்­டில், ஆயி­ரம் ஊழி­யர்­க­ளுக்கு 4.9 பேர் என்ற விகி­தத்­தில் ஆட்­கு­றைப்பு இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார். 60 மற்­றும் அதற்கு மேல் வய­து­டை­யோரி­டத்­தில் அவ்­வி­கி­தம் 1,000 பேருக்கு 5.2 பேர் என இருந்­தது.

நிச்­ச­ய­மில்­லாப் பொரு­ளி­யல் சூழ­லி­லும், 60 மற்­றும் அதற்கு மேல் வய­து­டை­ய­வர்­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­தம் ஒட்­டு­மொத்த ஊழி­ய­ர­ணி­யு­டன் ஒப்­பி­டும் வகை­யில் இருப்­ப­தாக அமைச்­சர் டியோ சொன்­னார்.

கடந்த 2009ஆம் ஆண்­டில் 27.2 விழுக்­கா­டாக இருந்த 60 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட உள்­ளூர்­வா­சி­க­ளின் வேலை­வாய்ப்பு விகி­தம், பத்­தாண்­டு­களில் 28.5 விழுக்­கா­டாக உயர்ந்­தி­ருப்­பதை திரு­வாட்டி டியோ சுட்­டிக்­காட்­டி­னார்.

55 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஊதி­யத்தை ஈடு­கட்டுவதற்காகச் சிறப்பு வேலை நிய­மன உத­வித்­தொகை, கடந்த ஆண்டு அறி­மு­க­மான பகுதி நேர மறு­வேலை நிய­ம­னத்­திற்­கான மானி­யம் உட்­பட முதி­ய­வர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கு­வதை ஊக்கு­விக்க கடந்த ஆண்­டு­களில் அறி­மு­கப்­படுத்­தப்­பட்ட திட்­டங்­களை­யும் அமைச்சர் டியோ தமது உரையின்போது பட்டியலிட்டார்.