10,402 மோசடி சம்பவங்களில் $157 மில்லியன் பறிபோனது

இவ்வாண்­டின் முதல் எட்டு மாதங்­களில் அதி­க­மா­னோர் மோச­டி­களில் சிக்கி ஏமாந்­துள்­ள­னர். இந்­தக் கால­கட்­டத்­தில் பதி­வான 10,402 மோச­டிச் சம்­ப­வங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் $157 மில்­லி­யனை இழந்­துள்­ள­னர்.

இது கடந்த ஆண்­டின் எண்­ணிக்­கை­யைப் போல இரு­ம­டங்கு ஆகும். கடந்த ஆண்டு 5,229 பேர் மோச­டிச் சம்­ப­வங்­கள் மூலம் $92 மில்­லி­யனை இழந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரின் மோசடி நிலைமை குறித்து வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஆங் வீ நெங் எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளித்­த­போது உள்­துறை துணை­ அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­க­ளை வெளியிட்டார்.

அதி­க­ரித்து வரும் மோச­டி­களை முறி­ய­டிப்­ப­தற்­காக வெளி­நாட்­டுச் சட்ட அம­லாக்க நிறு­வனங்­க­ளு­டன் ஒத்­து­ழைப்பை அதி­கரிப்­பது, போலிஸ் படை­யில் மோச­டி­களை முறி­ய­டிப்­ப­தற்­கான சிறப்­புப் பிரி­வு­களை அமைப்­பது போன்ற முயற்சி­களை போலிஸ் முடுக்­கி­விட்­டுள்­ளது என்று திரு டான் கூறி­னார்.

எடுத்­துக்­காட்­டாக, மோசடி தொடர்­பான குற்­றங்­களை விசா­ரிப்­ப­தற்­கான முக்­கிய மைய­மாக, போலி­சின் மோசடி எதிர்ப்பு மையம் விளங்குகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைக்­கப்­பட்ட அந்த மையம், முதல் ஆண்­டில் 6,100க்கும் மேற்­பட்ட வங்­கிக் கணக்­கு­களை முடக்­கி­யி­ருப்­ப­தா­க­வும் $21 மில்­லி­ய­னுக்­கும் மேற்பட்ட தொகையை மீட்­டுள்­ள­தா­க­வும் திரு டான் தெரி­வித்­தார்.

2018 நவம்­ப­ரில் அமைக்­கப்­பட்ட போலிஸ் படை­யின் இணைய வர்த்­தக மோசடி அம­லாக்க, ஒருங்­கிணைப்­புக் குழு இது­வ­ரை­யில் 101 இணைய வர்த்­தக மோச­டிக்­கா­ரர்­களைக் கைது செய்­துள்­ளது என்­றும் அவர் சொன்­னார்

இணைய வர்த்­தக மோச­டி­களே பொது­வாக அதி­க­மாக நடை­பெறும் மோச­டிக் குற்­றங்­க­ளா­கும். அதற்­கு அடுத்து, சமூக ஊடக ஆள்­மாறாட்ட மோச­டி­களும் கடன் மோசடி­களும் உள்­ளன என்று திரு டான் குறிப்­பிட்­டார்.

இது­போன்ற மோசடி அழைப்பு­கள் அல்­லது குறுஞ்­செய்­தி­கள் பற்றிய விவ­ரங்­களை போலி­சுக்கு அனுப்ப ஒரு வலைத்­த­ளம் அமைக்­கு­மாறு திரு ஆங் பரிந்­து­ரைத்­தார். அதற்குப் பதி­ல­ளித்த திரு டான், scamalert.sg தளம் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­களது அனு­ப­வங்­களைப் பகிர்ந்­து­கொள்ள அனு­மதிக்­கிறது என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!