தவறான தகவல்கள் தந்தால் வீடு கையகப்படுத்தப்படலாம்; சட்டம் நிறைவேற்றம்

தவறான தகவல்கள் தந்தால் வீடு கையகப்படுத்தப்படலாம்; சட்டம் நிறைவேற்றம்

1 mins read
74321192-fe25-4368-b52e-bd8458b24f2b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட்டு உரி­மை­யா­ளர் மாற்­றம் தொடர்­பில் வேண்­டு­மென்றே தவ­றான தக­வல்­க­ளைத் தந்­தால் வீட்­டைக் கைய­கப்­ப­டுத்த வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­திற்கு அதி­கா­ரம் வழங்­கும் சட்­டத்­தி­ருத்­தம் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நிறை­வேற்­றப்­பட்­டது. இப்­போது வீடு வாங்­கும்­போது வீட்­டு­ரி­மை­யா­ளர்­கள் அவ்வாறு வேண்­டு­மென்றே தவ­றான தக­வல்­க­ளைத் தந்­தால்தான் கட்­டாய கைய­கப்­ ப­டுத்­தல் அனு­ம­திக்­கப்­ப­டு­கிறது.

வீட­மைப்பு, வளர்ச்­சிச் சட்­டத்­தில் செய்­யப்­பட்­டுள்ள இன்­னொரு திருத்­தம், அங்­கீ­கரிக்கப்பட்ட வங்கி­கள் வீவக வீடு­க­ளுக்­கான சொத்­துக் கடன்­களை சிங்கப்பூர் நாணய ஆணை­யத்­தி­டம் இருந்து பண­மாக மாற்­றத்­தக்க சொத்­து­களாக அடை­மா­னம் வைக்க அனு­ம­திக்­கிறது.