ஊழியர்களின் மனநலம்: ஆண்டிறுதிக்குள் ஆலோசனைக் குறிப்பு

நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­களின் மன­ந­லத்தை மேம்­ப­டுத்த உத­வும் ஆலோ­ச­னைக் குறிப்பு இவ்­வாண்டு இறு­திக்­குள் வெளி­யிடப்­படும்.

பெயர் குறிப்­பி­டா­மல் வெளிப்­புற ஆலோ­ச­னைச் சேவை­கள் பெறும் வசதி, மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளுக்­கான அறி­கு­றி­களை முன்­ன­தா­கவே அடை­யா­ளம் காண மேற்­பார்­வை­யா­ளர்­க­ளுக்­குப் பயிற்சி போன்ற நிறு­வ­னங்­கள் பின்­பற்ற வேண்­டிய அம்சங்கள் அந்த ஆலோ­சனைக் குறிப்­பில் இடம்­பெற்­றி­ருக்­கும்.

மன­ந­லம் தொடர்­பான முத்­த­ரப்பு ஆலோ­ச­னைக் குழு இப்­போது ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்டுள்ளதாக மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது நாடாளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

இதன் தொடர்­பில், நிறு­வ­னங்­கள், தொழிற்­சங்­கங்­கள், மன­நல வல்­லு­நர்­கள், குடி­மைச் சமூ­கக் குழுக்­கள் ஆகி­யோ­ரு­டன் மனி­த­வள அமைச்சு இணைந்து பணி­யாற்றி வரு­கிறது.

கொவிட்-19 வேலை ஏற்­பா­டு­களின்­கீழ் உள்ள ஊழி­யர்­க­ளின் மன­ந­லத்­திற்கு ஆத­ரவு அளிப்­பதற்­காக கடந்த ஏப்­ர­லில் வெளி­யிடப்­பட்ட அனைத்து அமைப்பு ஆலோ­சனைக் குறிப்பு, ஒரு பய­னுள்ள குறிப்­பா­கத் திகழ முடி­யும் என்று திரு ஸாக்கி தெரி­வித்­தார்.

மன­நல ஆத­ரவு அளிக்­கும் வெளிப்­புற வளங்­க­ளின் பட்­டி­யல் அதில் இடம்­பெற்­றுள்­ளது. தங்­களின் ஊழி­யர்­க­ளுக்கு மன­நல ஆத­ரவு வழங்க அவற்றை ஈடு­படுத்­திக்­கொள்­வது குறித்துந் நிறு­வ­னங்­கள் பரி­சீ­லிக்­க­லாம்.

“நிறு­வ­னங்­களும் தங்­க­ளின் ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் முயற்­சி­க­ளைத் தொடங்­க­லாம். எடுத்­துக்­காட்­டாக, ஊழி­யர்­க­ளு­டன் மேற்­பார்­வை­யா­ளர்­கள் அடிக்­கடி பேசு­வ­தன் மூலம் அவர்­கள் ஏதே­னும் பிரச்­சி­னையை எதிர்­கொண்டு உள்­ள­னரா என்­பதை அறிந்து, தேவைப்­பட்­டால் வெளிப்­புற உத­விக்­குப் பரிந்­து­ரைக்­க­லாம்,” என்­றார் திரு ஸாக்கி.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் இப்­போ­தைய ஏற்­பா­டு­கள், வேலை நேரத்­திற்­கும் தனிப்­பட்ட நேரத்­திற்­கும் இடையே தெளி­வின்­மையை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தாக ஒத்­துக்­கொண்ட அவர், வேலை - வாழ்க்­கைச் சம­நி­லை­யைச் சிறப்­பா­கப் பேணு­வது எப்­படி என்­பதை அர­சாங்­கம் ஆராய வேண்­டி­யது முக்­கி­யம் என்­றும் சொன்­னார்.

ஆயி­னும், வேலை நேரம் தவிர்த்த மற்ற நேரங்­களில் வேலை சார்ந்த பணி­களை மேற்­கொள்­ளா­தி­ருக்க வகை­செய்­யும் ‘வில­கி­யிருக்­கும் உரிமை’ சட்­டம் இவ்­வு­ல­கிற்­குப் புதி­யது என்­றும் சிங்­கப்­பூர் உள்­ளிட்ட பல நாடு­கள் இன்­னும் அதன் விளை­வு­க­ளைக் கவ­னித்து வரு­கின்­றன என்­றும் திரு ஸாக்கி குறிப்­பிட்­டார்.

வேலை செய்­யும் திற­னு­டன் நேர­டித் தொடர்பு இல்­லாதபட்­சத்­தில், ஊழி­யர் ஒரு­வ­ரின் மன­ந­லம் குறித்த தக­வல்­களை நிறு­வ­னங்­கள் கேட்­கக்­கூ­டாது என்ற ஆலோ­சனை, புதிய ஆலோ­ச­னைக் குறிப்­பில் தெளி­வா­கக் குறிப்­பி­டப்­ப­டுமா என்று நீ சூன் குழுத்­தொ­குதி நாடாளு­மன்ற உறுப்­பி­னர் லுயிஸ் இங் கேட்­டார்.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு ஸாக்கி, “முத்­த­ரப்பு ஆலோ­ச­னைக் குறிப்பு இன்­னும் வெளி­யா­க­வில்லை என்­ப­தால் அது­கு­றித்து உறு­தி­யாகச் சொல்ல முடி­யாது. ஆனா­லும், நிச்­ச­ய­மாக அது குறித்து ஆராய்­வோம்,” என்­றார்.

அதே நேரத்­தில், வேலைக்­குத் தேவைப்­ப­டாத பட்­சத்­தில், வேலைக்கு விண்­ணப்­பிக்­கும்­போது அத்­த­கைய தக­வல்­களைக் கேட்க நிறு­வ­னங்­கள் ஊக்­கு­விக்­கப்­படுவது இல்லை என்­றும் அவர் தெளிவு­படுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!