நீக்குப்போக்கான வேலை நேரத்துக்கு அழைப்பு

பொதுப் போக்­கு­வ­ரத்­தில் கூட்ட நெரி­ச­லைத் தவிர்க்க ஊழி­யர்­க­ளுக்கு நீக்­குப்­போக்­கான வேலை நேரத்தை அனு­ம­திக்­கும்­படி முத­லாளிக­ளைப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் கேட்­டுக்­கொண்­டுள்­ளார். வேலை­யி­டங்­களில் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு வரு­வ­தால் இந்­தக் கோரிக்­கையை அவர் விடுத்­துள்­ளார்.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் ஊழி­யர்­கள் காலை உச்­ச­நே­ரத்­துக்­குப் பிறகு அலு­வ­ல­கங்­க­ளுக்­குப் புறப்பட முத­லா­ளி­கள் ஏற்­பாடு செய்­ய­லாம் என்­றார் அமைச்­சர் ஓங்.

அவ்­வாறு செய்­வ­தன் மூலம் ஊழி­யர்­கள் காலை 10 மணி அல்­லது அதற்­குப் பிறகு அலு­வ­ல­கத்தை அடை­வர் என்­றார் அவர்.

கடந்த ஏப்­ரல் மாதம் கிரு­மிப் பர­வல் முறி­ய­டிக்­கும் திட்­டம் நடப்­பில் இருந்­த­போது பொதுப் போக்கு­ வ­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­வோ­ரின் எண்­ணிக்கை வெகு­வா­கக் குறைந்­த­தாக தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் திரு ஓங் பதி­விட்­டார்.

“கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு பொதுப் போக்­கு ­வ­ரத்­தில் பய­ணம் செய்­தோ­ரின் எண்­ணிக்­கை­யில் 50 அல்­லது 60 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தற்­போது பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இது உச்­ச­நே­ரம் மற்­றும் உச்­ச­நே­ர­மற்ற வேளை­க­ளுக்­கும் பொருந்­தும்,” என்று திரு ஓங் கூறி­னார்.

ஆனால் இது குறித்து கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை என்­றார் அவர்.

“முன்­பை­விட ரயில்­களில் தற்­போது அவ்­வ­ள­வா­கக் கூட்­டம் இருப்­ப­தில்லை. மேலும் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணம் செய்­யும்­போது முகக்­க­வ­சத்தை அணிந்­து­கொண்டு பிற­ரி­டம் பேசு­வ­தைத் தவி­ர்க்க வேண்­டும்,” என்­றார் திரு ஓங்.

செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி­யி­லி­ருந்து அலு­வ­ல­கங்­க­ளுக்­குத் திரும்ப கூடு­தல் ஊழி­யர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­படும் என்று அர­சாங்­கம் கடந்த மாதம் அறி­வித்­தது.

கூட்­டங்­கள், பயிற்­சி­கள், வர்த்­தக மாநா­டு­கள் போன்ற வேலை தொடர்­பான நிகழ்­வு­களை நடத்­த­லாம்.

இருப்­பினும், ஊழி­யர்­கள் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும். அலு­வ­ல­கத்­தி­லும் அதற்கு வெளி­யி­லும் சமூக ஒன்­று­கூ­டல்­க­ளுக்கு அனு­மதி இல்லை.

வேலை, பய­ணம் தொடர்­பான பழக்­க­வ­ழக்­கங்­களை மாற்ற அரிய வாய்ப்பு கிடைத்­தி­ருப்­ப­தா­க­வும் அதை வீண­டிக்க வேண்­டாம் என்றும் முத­லா­ளி­களை திரு ஓங் கேட்­டுக்­கொண்­டார்.

“வேலை­யி­டம், வேலை நேரம் ஆகி­ய­வற்­றில் நீக்­குப்­போக்­கு­டன் இருக்க வேண்­டும். பிற­ரைச் சந்­திப்­ப­தற்­கும் ஆவ­ணங்­களில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்­கும் குறிப்­பிட்ட சில சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து ­வ­தற்­கும் அலு­வ­லகங்­க­ளுக்கு ஊழி­யர்­கள் செல்­கின்­ற­னர்.

“உச்­ச­நே­ர­மற்ற வேளை­களில் கூட்­ட­மில்­லாத பொதுப் போக்­கு­வ­ரத்­தில் மேலும் பலர் பய­ணம் செய்­ய­லாம்,” என்­றார் திரு ஓங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!