வீட்டுச் சன்னல்களுக்கு அருகிலும் மேல் மாடங்களிலும் புகைபிடிப்பதற்குத் தடை விதிக்க பரிந்துரை

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள், தனி­யார் அடுக்­கு­மாடி வீடு­கள் ஆகி­ய­வற்­றில் வசிப்­ப­வர்­கள் தங்­கள் வீட்­டுச் சன்­னல்­கள் அரு­கில் அல்­லது மேல் மாடத்­தில் புகை

­பி­டிப்­ப­தைத் தடை செய்ய அர­சாங்க நாடா­ளு­மன்­றக் குழு அழைப்பு விடுத்­துள்­ளது. சிக­ரெட் புகை­யால் அண்­டை­வீட்­டார் பாதிப்­ப­டை­வதை இது குறைக்­கும் என்று அது தெரி­வித்­தது.

பிறர் புகை­பி­டித்து அத­னால் ஏற்­படும் புகை­யால் பாதிக்­கப்­பட்டு 2016ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் 383 பேர் மாண்­டதை நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சுக்­கான அர­சாங்க நாடா­ளு­மன்­றக் குழு­வுக்­குத் தலைமை தாங்­கும் திரு லுயில் இங் சுட்டினார்.

“இது அன்­றா­டம் ஒரு­வர் இறப்­ப­தற்­குச் சமம். இது­கு­றித்து உட­னடி ­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்,” என்று திரு இங் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இந்­தப் பிரச்­சி­னையை எதிர்­கொள்­வோர் தம்­மி­டம் அவர்­க­ளது அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­தாக திரு இங் கூறி­னார். இது பல ஆண்­டு­க­ளாக நீடிப்­ப­தா­க­வும் தற்­போது மோச­ம­டைந்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் கவலை தெரி­வித்­தார்.

இந்த ஆண்­டின் முதல் நான்கு மாதங்­களில் புகை­பி­டிப்­பது தொடர்­பாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தி­டம் 11,400 புகார்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. இது கடந்த ஆண்­டை­விட 20 விழுக்­காடு அதி­கம்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக முன்­பை­விட மேலும் அதி­க­மா­னோர் வீட்­டி­லி­ருந்து வேலை செய்து வரும் நிலை­யில், சமூக சம­ரச மையம் வரை சென்­றி­ருக்­கும் புகை­பி­டித்­தல் தொடர்­பான சர்ச்­சை­கள் நான்கு மடங்கு அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக திரு இங் தெரி­வித்­தார்.

பலர் உதவி கேட்டு அதி­கா­ரி­களை நாடி­­ய­தா­க­வும் ஆனால் அது கைகொ­டுக்­க­வில்லை என்­றும் திரு இங் தெரி­வித்­தார்.

“இந்த விவ­கா­ரம் குறித்து நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உதவி செய்ய விரும்­பி­னா­லும் ஒன்­றும் செய்ய முடி­ய­வில்லை. இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண தகுந்த சட்­டம் ஏதும் இல்­லா­ததே இதற்­குக் கார­ணம்,” என்­றார் திரு இங்.

இந்­நி­லை­யில், திரு இங் முன்­வைத்த பரிந்­து­ரை­க­ளுக்கு நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்புற மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஏமி கோர் பதி­ல­ளித்­தார்.

பரிந்­து­ரைக்­கப்­பட்ட அணு­கு­முறை ஒரு­வ­ரின் தனிப்­பட்ட விவ­கா­ரத்­தில் தலை­யி­டு­வ­தா­கி­வி­டும் என்று தெரிவித்­தார். இத்­த­கைய விதி­மு­றை­களை அமல்­ப­டுத்­து­வ­தில் பல சிக்­கல்­கள் ஏற்­படும் என்­றார் அவர். குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் உரி­மை­கள் குறித்து ஏற்­கெ­னவே நில­வும் அக்­க­றை­களை இது மேலும் மோச­மாக்­கும் என்று டாக்­டர் கோர் கூறி­னார். மாறாக, மூன்று வெவ்­வேறு அணு­கு­மு­றை­களை அமைச்சு கையா­ளும் என்று அவர் தெரி­வித்­தார்.

முத­லில் புதிய சமூக வழக்­கத்­தை­யும் கூடு­தல் சமூ­கப் பொறுப்­பை­யும் ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றார் டாக்­டர் கோர்.

இரண்­டா­வ­தாக, அண்­டை­வீட்­டுக்­கா­ரர்­க­ளுக்கு இடையே தக­ராறு ஏற்­ப­டும்­போது அவர்­க­ளுக்­குள் பேசித் தீர்க்க கூடு­தல் வழி­களை ஆராய வேண்­டும் என்­றார் அவர்.

மூன்­றா­வ­தாக அண்­டை­வீட்­டுக்­கா­ரர்­க­ளுக்கு இடையே பிரச்­சினை ஏற்­ப­டும்­போது அவற்றை பல அமைப்­பு­க­ளைக் கொண்டு சமூ­கப் பிரச்­சினை நிர்­வா­கக் கட்­ட­மைப்பு எவ்­வாறு கையா­ள­லாம் என்­பது குறித்­தும் சமூ­க சம­ரச செயல்­மு­றை­யை­யும் மறு­ஆய்வு செய்ய வேண்­டும் என்று டாக்­டர் கோர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!