ஈஸ்வரன்: இணையப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு முக்கியம்

உல­கம் சில வழி­களில் பிள­வு­பட்ட ஒன்­றாக மாறி­வர, இணை­யப் பாது­காப்பு மற்­றும் தொழில்­நுட்ப அம்­சங்­களில் சவால்­களை எதிர்­நோக்­கும் நாடு­க­ளுக்கு விதி­மு­றை­கள்-அடிப்­ப­டை­யி­லான பல­த­ரப்பு அமைப்­புக்­குள் அனைத்­து­லக ஒத்­து­ழைப்பு கிடைப்­பது மேலும் இன்­றி­ய­மை­யா­த­தா­கி­யுள்­ளது என்­றார் தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன்.

தற்­போ­துள்ள பல­த­ரப்பு வர்த்­தக அமைப்­பு­மு­றைக்­கான பொது விதி­களை அனைத்து நாடு­களும் பின்­பற்றி வரு­கின்­றன.

அத்­து­டன் ஒருங்­கி­ணைந்த விருப்­பங்­க­ளைக் கொண்ட பங்­காளி­க­ளுக்­கி­டை­யே­யும் கூடு­தல் ஒத்­து­ழைப்­புக்கு இட­ம­ளிக்­கப்­ப­டு­கிறது. இந்த அமைப்­பு­மு­றைக்கு ஒத்­த­தாக தமது அனைத்­து­லக இணை­யச் சூழ­லுக்­கான தொலை­நோக்­குப் பார்வை இருப்­ப­தாக திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

“இணை­யப் பாது­காப்பை எடுத்­துக்­கொண்­டால், எடுத்­துக்­காட்­டாக ஐக்­கிய நாடு­கள் ஆற்­றி­யுள்ள பணி அந்த பல­த­ரப்பு அணு­கு­மு­றையை உரு­வாக்­கு­வ­தில் மிக முக்­கி­ய­மா­ன­தாக உள்­ளது,” என்­றார் அவர்.

பெரும்­பா­லும் மெய்­நி­க­ராக நடை­பெ­றும் இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர் அனைத்­து­லக இணைய வாரத்­தின் தொடக்க நிகழ்­வில் அமைச்­சர் இவ்­வாறு பேசி­யி­ருந்­தார்.

“வட்­டார பங்­கா­ளித்­து­வ­மும் முக்­கி­யம் என்று நான் நினைக்­கி­றேன்.

ஒரே சிந்­த­னை­யு­டைய நாடு­கள் இணைந்து செயல்­பட முடி­யும். அத்­து­டன் பல­த­ரப்பு தளத்­தின் மூலம் சாதிப்­ப­தைக் காட்­டி­லும் மேலும் வேக­மா­க­வும் புத்­தாக்­கத்­து­ட­னும் இயங்கி அதி­க­மா­கச் சாதிக்­க­லாம்,” என்­றார் திரு ஈஸ்­வ­ரன்.

பல பங்­கு­தா­ரர்­கள் தொடர்­பான ஒரு கலந்­து­ரை­யா­ட­லில் பல­த­ரப்­புத்­தன்­மை­யை­யும் கருத்து வேறு­பாடு இன்­மை­யை­யும் ஒரு சேரக் கொண்­டு­வ­ரக்­கூ­டாது என்­றும் அவர் கூறி­னார்.

வளர்ந்து வரும் தொழில்­நுட்­பத்­தின் பலன்­களை முழு­மை­யாக அனு­ப­விக்க அர­சாங்­கங்­க­ளுக்­கும் தனி­யார் துறைக்­கும் மேலும் வலு­வான ஒத்­து­ழைப்பு அவ­சி­யம் என்­பதை வலி­யு­றுத்­தி­னார் அமைச்­சர்.

“தனி­யார் துறை­யி­டம் உள்ள புத்­தாக்­க­மும் உத்­வே­க­மும் உங்­க­ளுக்­குத் தேவை.

சமூ­கத்­தி­லும் பொரு­ளி­ய­லி­லும் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கம் என்ன என்­பதை மதிப்­பிட்டு அனை­வ­ரை­யும் திட்­டத்­தில் இணைப்­பது குறித்து அர­சாங்­கத்­தின் செல்­வாக்­கும் அவ­சி­யம்,” என்­றார் அமைச்சர்.

சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரம் வெள்ளிக்கிழமை முடிவுறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!