இணையத்தில் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் புதிய வசதி

ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு அமைப்பு (எஐசி) நிர்­வ­கிக்­கும் நிதி­யு­த­வித் திட்­டங்­க­ளுக்­கான விண்­ணப்­பப் படி­வங்­கள் இனி அதன் புதிய இணை­யத்­த­ளத்­தின் மூலம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­லாம்.

“நிதி­யு­த­வித் திட்­டங்­கள் வழி பல­ன­டைந்து வரு­வோ­ரும் அவற்­றுக்கு விண்­ணப்­பிக்க விரும்­பு­வோ­ரும் விண்­ணப்­பங்­க­ளைச் சமர்ப்­பிக்­கும் முறை இனி, மேலும் எளி­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது,” என்று அமைப்­பின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இணை­யத்­த­ளம் தொடங்­கப்­படு­வ­தற்கு முன் விண்­ணப்­பப் படி­வங்­கள் நேர­டி­யா­கவோ அஞ்­சல் வழி­யா­கவோ அமைப்­புக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு வந்­தன. விண்­ணப்­பம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது குறித்­தும் வழங்­கப்­படும் தொகை குறித்­தும் விண்­ணப்­ப­தா­ரர்­கள் தக­வல் அறிய அஞ்­சல், தொலை­பேசி அழைப்பு அல்­லது மின்­னஞ்­சல் வழி அமைப்­பு­டன் தொடர்­பு­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.

இனி ‘சிங்­பாஸ்’ மூலம் இணை­யத்­த­ளத்­தைப் பயன்­ப­டுத்தி ஒரு­வர் நிதி­யு­த­வித் திட்­டத்­திற்கு விண்­ணப்­பிப்­ப­து­டன் அது எந்த நிலை­யில் உள்­ளது என்­ப­தைக் கண்­கா­ணிக்கவும் முடி­யும்.

‘கேர்­ஷீல்ட் லைஃப்’, ‘எல்­டர் ஃபண்ட்’ போன்­றவை எஐசி நிர்­வ­கித்து வரும் நிதி­யு­த­வித் திட்­டங்­களில் அடங்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!