எட்டு ஆண்டுகளில் ஆக மோசம் நேரத்துடன் கட்டணம் செலுத்துவதில் கட்டுமானத் துறை நிறுவனங்கள் அலட்சியம்

சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்­குத் தற்­போது நேர்ந்­துள்ள பணப்­பு­ழக்க நெருக்­க­டி­யால் எட்டு ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு நேரத்­து­டன் கட்­ட­ணம் செலுத்­து­வ­தைப் பாதித்­துள்­ளது. அதி­லும் காலாண்டு அடிப்­ப­டை­யில் கட்­டு­மா­னத் துறை­யி­லேயே ஆக அதி­க­மான கட்­ட­ணத் தாம­தம் பதி­வா­கி­யது.

மூன்­றாம் காலாண்­டின் மொத்த பரி­வர்த்­த­னை­களில், நேரத்­து­டன் செலுத்­தப்­பட்ட கட்­ட­ணங்­கள் 38.39%. முந்­தைய காலாண்­டில் இது 40.09 விழுக்­கா­டாக இருந்­தது. 2012ன் இரண்­டாம் காலாண்­டில் பதி­வான 37.3 விழுக்­காட்­டுக்கு அடுத்து இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் பதி­வா­னதே ஆகக் குறைவு. சிங்­கப்­பூர் வர்த்­தக கடன் இலாகா நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

ஆண்டு அடிப்­ப­டை­யில் ஒப்­பி­டு­கை­யில் நேரத்­து­டன் கட்­ட­ணம் செலுத்­தும் விகி­தத்­தில் மேலும் பெரிய சரிவு காணப்­பட்­டது. 2019ன் மூன்­றாம் காலாண்­டில் 48.81% என பதி­வா­கி­யி­ருந்­தது. இவ்­வாண்­டு­டன் ஒப்­பிட்­டால் இது 10.42% சரிவு. கடன் இலாகா மூலம் இயங்கி வரும் நிறு­வ­னங்­க­ளின் 1.6 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட பரி­வர்த்­த­னை­க­ளி­லி­ருந்து ‘டி அண்ட் பி சிங்­கப்­பூர்’ தரவு திரட்­டி­யி­ருந்­தது.

கட்­ட­ணங்­க­ளைத் தாம­த­மா­கச் செலுத்­தி­ய­தன் விகிதம், சென்ற காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 45.78 விழுக்­காட்­டி­லி­ருந்து 44.16 விழுக்­காட்­டுக்­கும் சிறி­த­ளவு சரிந்­தது. இருப்­பி­னும் ஆண்டு அடிப்­படை­யில் 2019ன் மூன்­றாம் காலாண்­டில் 37.29 விழுக்­கா­டாக இருந்­தது இந்த காலாண்­டில் 6.87% என அதி­க­ரித்­தது. ஒப்­பந்­தத்­தில் குறிப்­பி­டப்­பட்ட காலக்­கெ­டு­வுக்­குள் ஒரு நிறு­வ­னம் அதன் 90% அல்­லது அதற்கு மேற்­பட்ட கட்­ட­ணங்­க­ளைச் செலுத்தி இருந்­தால் நேரத்­து­டன் கட்­ட­ணம் செலுத்­து­வ­தாக அது குறிக்­கும். 50% மட்­டுமே நேரத்­து­டன் செலுத்­தப்­பட்­டி­ருந்­தால் அது தாம­த­மான கட்­ட­ண­மா­கும்.

இதற்­கி­டையே பகு­தி­வா­ரி­யான கட்­ட­ணங்­கள் அதா­வது 50% முதல் 70% கட்­ட­ணங்­கள் நேரத்­து­டன் செலுத்­தப்­பட்­டது மூன்­றாம் காலாண்­டில் 17.45% அதி­க­ரித்­தி­ருந்­தது. முந்­தைய காலாண்­டில் இது 14.13 விழுக்­கா­டாக இருந்­தது.

இந்­நி­லை­யில் வர்த்­த­கங்­க­ளின் பகு­தி­வா­ரி­யான கட்­ட­ணங்­கள் மூன்­றாம் காலாண்­டில் அதி­க­ரித்­துள்­ள­தாக குறிப்­பிட்ட ‘டி அண்ட் பி சிங்­கப்­பூர்’ நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு­வாட்டி ஆட்ரி சியா, அடுத்த சில மாதங்­க­ளி­லும் படிப்­ப­டி­யாக கட்­ட­ணம் செலுத்­தும் இந்தப் போக்கு தொட­ரும் என்று எதிர்­பார்க்­க­லாம் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!