தேசிய சேவையாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை

தேசிய சேவையாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை

1 mins read
aea272e8-4fb6-4096-8c4f-e1bbbae7862e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பயிற்சியின்போது மற்றவர்களை நெருங்கி இருப்பது தவிர்க்க முடியாது என்பதால், தயார்நிலை தேசிய சேவையாளர்கள் சிலர் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டியிருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா தொற்றைக் கண்டறிந்து, அதன் பரவலைத் தடுக்கும் முயற்சியை மேம்படுத்தும் விதமாக இடம்பெறும் இந்தக் கூடுதல் நடவடிக்கை இம்மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது என்று டாக்டர் இங் கூறினார்.

சிங்கப்பூர் ஆயுதப் படை பயிற்சி நடவடிக்கைகள் அதிகரித்து இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.