இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 42% உயரும்

புதுடெல்லி: கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 42 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா கிருமித்தொற்றின் தாக்கத்தால் உலக நாடுகள் பலவற்றின் ஏற்றுமதி, இறக்குமதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் வறட்சி காரணமாக அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் ஏற்றுமதி இலக்குகளை தாய்லாந்தால் எட்ட முடியவில்லை. வியட்னாமிலும் இம்முறை அரிசி விளைச்சல் குறைவாகவே உள்ளது.

இதனால் இவ்விரு நாடுகளின் ஏற்றுமதி அளவை உலகச்சந்தையில் ஈடுகட்டுவதற்கான வாய்ப்பு இயல்பாகவே இந்தியாவுக்கு வந்துவிடுகிறது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தாய்லாந்தின் அரிசி ஏற்றுமதி நடப்பாண்டில் 6.5 மில்லியன் டன்களாகக் குறையக்கூடும் என்றும் இது கடந்த 20 ஆண்டுகளில் ஏற்றுமதியான அரிசி அளவில் ஆகக் குறைவு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அரிசி ஏற்றுமதியில் அனைத்துலக அளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வியட்னாமின் பாசனப் பகுதிகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் இந்தாண்டு அரிசி உற்பத்தி குறைந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை பங்களாதேஷ், நேப்பாளம், பெனின் & செனகல் உள்ளிட்ட நாடுகளுக்கு பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்கிறது. ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு உயர் ரக பாசுமதி அரிசி ஏற்றுமதி ஆகிறது.
நடப்பாண்டில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பாசுமதி அல்லாத இதர ரக அரிசிகளுக்கு ஏற்றமதி ஒப்பந்தங்கள் வரும் என எதிர்பார்க்கலாம் என்கிறார் ‘ஓலம் இந்தியா’ நிறுவனத்தின் துணைத் தலைவரான நிதின் குப்தா.

இந்தியாவில் பாசுமதி அல்லாத பிற அரிசி ரகங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இருமடங்காக (9.5 மில்லியன் டன்கள்) உயரும் என்றும் பாசுமதி அரிசியின் ஏற்றமதி தற்போதுள்ளதைப் போல் 4.5 மில்லியன் டன்களாக நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

குறிப்பிட்ட ஒரு ரக அரிசிக்கு டன் ஒன்றுக்கு 380 அமெரிக்க டாலர் விலை நிர்ணயித்துள்ளது இந்திய தரப்பு. இதே ரக அரிசியை தாய்லாந்து டன் ஒன்றுக்கு 490 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்வதைச் சுட்டிக்காட்டும் நிபுணர்கள், இத்தகைய காரணங்களால் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி நடப்பாண்டில் 42 விழுக்காடு அதிகரிக்கும் என்கிறார்கள்.

கடந்த 8 ஆண்டுகளில் ஆகக் குறைவாக கடந்தாண்டு இந்தியா 9.9 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்திருந்தது. நடப்பாண்டில் அது 14 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!