மாணவரை மானபங்கம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

மாணவரை மானபங்கம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

1 mins read
3b4f336f-3ebb-4b19-99ab-d1fe05f9081b
படம்: ஷட்டர்ஸ்டாக் -

தான் வேலை பார்த்த பள்ளியின் அறிவியல் கூடத்திற்குள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவரை மானபங்கம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வட்டார நீதிமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டின் தொடர்பில் அந்த 31 வயது ஆடவர் நேற்று விசாரிக்கப்பட்டார்.

இதன் தொடர்பில் அவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கல்வியமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

10,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்ட அந்த ஆடவரின் வழக்கு மறுபடியும் அக்டோபர் 27ஆம் தினத்தன்று விசாரிக்கப்படும்.

14 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களை மானபங்கம் செய்தவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.