பொருத்தமான வேலை வழங்க மறுஆய்வு

வேலை தேடு­வோ­ருக்­கும் காலி­யாக உள்ள வேலை­க­ளுக்­கும் இடை­யி­லான பொருத்­தத்தை ஏற்­ப­டுத்­து­வது சிக்­க­லான பணி என்­றும் அதற்­கான நடை­மு­றை­களை மேம்­ப­டுத்த மறு­ஆய்வு மேற்­கொள்­ளப்­படும் என்­றும் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் அறி­வித்­துள்­ளார். கிராஞ்­சி­யில் கட்­டு­மான நிறு­வ­ன­மான சேம்வோ கார்ப்­ப­ரே­ஷ­னின் ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்டு நிலை­யத்­திற்கு நேற்று சென்­றி­ருந்த அவர், அங்கு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார். ஆக அண்­மைய வேலை நில­வர அறிக்­கையை மனி­த­வள அமைச்­சு வெளியிட்ட பின்னர் அது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

தேசிய வேலை மன்­றம் இது­வரை 117,500 வேலை­, பயிற்சி வாய்ப்­பு­களை உரு­வாக்­கியுள்ளது. இது 100,000 வேலை, பயிற்சி வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்ற இலக்­கை­யும் மிஞ்­சி­விட்­டது. ஆயி­னும், இதற்­கு­ரிய இடங்­களில் 33,100 பேர் மட்­டுமே நிய­மிக்­கப்­பட்டு உள்­ள­னர். எஞ்­சிய இடங்­கள் இன்­னும் நிரப்­பப்­ப­டா­மல் உள்­ளன.

அது குறித்து விளக்­கிய துணைப் பிர­த­மர், “வேலை­வாய்ப்பு என்­னும் அம்­சத்­தில் நாம் முன்­னோக்கி நடை­போ­டு­வ­தால் காலி­யாக உள்ள வேலை­க­ளுக்­கும் வேலை தேடு­வோ­ருக்­கும் இடை­யில் பொருத்­தத்தை இன்­னும் மேம்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்டு உள்­ளது. எஸ்ஜி யுனை­டெட் வேலை, திறன் மையங்­களும் இன்­னும் சில அமைப்­பு­களும் இதற்­கான மறு­ஆய்­வுப் பணி­யில் ஈடு­பட உள்­ளன,” என்­றார் நிதி அமைச்­ச­ரும் பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு ஹெங்.

“வேலை தேடு­வோ­ரின் விருப்­பத்­திற்கு ஏற்ற வேலையை வழங்­கும் நோக்­கில் தற்­போது நடப்­பில் உள்ள தர­வு­தள முறை­களை எவ்­வாறு சிறந்த முறை­யில் பயன்ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என்­கிற அம்­சத்­தை­யும் மறு­ஆய்வு உட்­ப­டுத்­தும்.

“வேலை­களை இழந்­தோர் அதே­போன்ற வேலை­யைப் பெறு­வது என்­பது அவ்­வ­ளவு எளி­தா­ன­தல்ல. இருப்­பி­னும் விடா­மு­யற்­சி­யு­டன் ஈடு­ப­டக்­கூ­டிய மீள்­தி­றன் உணர்வு நம்­மி­டையே மிகுந்­தி­ருப்­பதை எண்ணி மகிழ்­கி­றேன். பொருத்­த­மான வேலை­யை தேடும் நடை­முறை சிக்­க­லானது என்­ப­தால் விடா­மு­யற்­சி­யோடு தேடு­த­லில் ஈடு­பட்­டால் உரிய வேலையை எப்­ப­டி­யா­வது அவர்­கள் பெறக்­கூ­டிய சாத்­தியம் உள்­ளது.

“வேலை தேடும் அதே­நே­ரம் திறன்­களை வளர்த்­துக்­கொள்­ள­வும் ஏரா­ள­மான திட்­டங்­கள் உள்­ளன. புதிய திறன்­க­ளை­யும் அவற்­றின் மூலம் பெற­லாம் என்­ப­தால் ஊழி­யர்­கள் இதற்­கான திட்­டங்­களை போது­மான அள­வுக்­குப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்,” என்று திரு ஹெங் ஊக்­கம­ளித்­தார்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் உல­க­ள­வி­லான பொரு­ளி­ய­லை­யும் வேலைச் சந்­தை­க­ளை­யும் மாற்றி அமைத்து வரும் வேளை­யில் சிங்­கப்­பூர் வளர்ச்சி கண்டு வரும் துறை­கள் இருப்­ப­தால் வேலை தேடு­வோர் நம்­பிக்­கை­யு­டன் முயற்­சி­க­ளைத் தொடர வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

வேலை தேடு­வோர் புதிய பொறுப்­பு­களை ஏற்­க­வும் பயிற்­சி­களை மேற்­கொள்­ள­வும் தயா­ராக இருக்­கும் அதே­வேளை, அவர்க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளைப் பூர்த்தி செய்ய முத­லா­ளி­கள் நீக்­குப்­போக்­கு­டன் நடந்­து­கொள்ள வேண்­டிய அவ­சி­யம் உள்­ள­தென்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!