கொள்ளை நோய் சூழலிலும் 33,100 பேருக்கு வேலைவாய்ப்பு

2 mins read
4a6723b3-b4d8-4092-a326-04e2baf57f99
'எஸ்ஜியுனைடெட்' வேலைச் சந்தையில் நேர்காணலுக்காக காத்திருக்கும் மக்கள். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

கொவிட்-19 கிரு­மித்­தொற்று நெருக்கடி தொடங்கியது முதல் பல்வேறு அர­சாங்­கத் திட்­டங்­கள் மூலம் 33,100 பேருக்கு வேலை­களும் வேலைப்­ப­யிற்சி இடங்­களும் கிடைத்­துள்­ள­தாக மனி­த­வள அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

'எஸ்­ஜி­யு­னை­டெட் வேலை­கள், திறன்­க­ளுக்­கான தொகுப்­புத்­திட்­டத்தின்' கீழ் ஆகஸ்ட் மாத இறு­திக்­குள் உரு­வாக்­கப்­பட்ட 117,500 புதிய வேலை­கள், வேலைப்­ப­யிற்சி வாய்ப்­பு­களில் 33,100 பேர் பல­ன் அ­டைந்­துள்­ள­னர்.

ஒவ்­வொரு வார­மும் சிங்­கப்­பூரின் வேலை நில­வ­ரம் தொடர்­பான அறிக்­கையை வெளி­யிட்டு வரும் மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, நேற்று இத­னைத் தெரி­வித்­தார்.

இவ்­வாண்டு மே மாதத்­தில் $2 பில்­லி­யன் மதிப்­பி­லான 'எஸ்­ஜி­யு­னை­டெட் வேலை­கள், திறன்­க­ளுக்­கான தொகுப்­புத்­திட்­டம்' அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து நேற்­றைய அறிக்­கை­யில் அமைச்­சர் டியோ தற்­போ­தைய நில­வ­ரத்­தைத் தெரி­வித்­தார்.

ஜூலை இறுதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை 25,500 வேலை வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­ட­தாக அறிக்கை கூறி­யது. 17,000 வேலை­களும் நிறு­வ­னங்­க­ளின் 7,900 வாய்ப்­பு­கள், வேலைப்­ப­யிற்சி இடங்­களும் இதில் அடங்­கும்.

அர­சாங்க நிதி­ ஆதரவு பெற்ற வாய்ப்­பு­களும் பொதுத்­துறை வேலை­களும் வளர்ச்­சி­யில் பெரும் பங்­காற்­றி­ய­தாக அறிக்கை தெரி­வித்­தது. நீண்­ட­கா­லத்­திற்கு நீடிக்­கும் சுமார் 60,000 வேலை­களில், 37,290 வேலை­கள் தனி­யார் துறை உரு­வாக்­கி­யவை.

"இது நல்ல முன்­னேற்­றம். வாய்ப்­பு­களை ஒருங்­கி­ணைப்­ப­தில் மட்­டும் முன்­னேற்­றம் அல்ல, ஆட்­களை வேலை­யில் அமர்த்­து­வ­தி­லும் நல்ல முன்­னேற்­றம்," என்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கூறி­னார் திரு­வாட்டி டியோ. ஜூலை மாத இறு­தி­யில் 24,000 பேர் வேலை­யில் அமர்த்­தப்­பட்­ட­னர். பின் இந்த எண்­ணிக்கை 9,100 ஆக அதி­க­ரித்து ஆகஸ்ட் இறு­தி­யில் 33,100 ஆனது.

வேலை தேடு­வோ­ருக்­குத் தகுந்த வாய்ப்பை அமைக்­கும் போக்கு தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­க­லாம் என்று அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது.

வேலை­யில் அமர்த்­தப்­ப­டு­வது 5,580 ஆக அதி­க­ரித்து தற்­போது மொத்­தம் 29,580 ஆகி­யுள்­ளது. 12 மாதங்­க­ளுக்­கும் குறை­வான காலத்­திற்கு நீடிக்­கும் வேலை­யில் அமர்த்­தப்­பட்­டோ­ரின் விகி­தம் 55%. இது ஜூலை இறு­தி­யில் பதி­வான 58 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் சரிவு.

அர­சாங்­கம் முன்­ன­தாக குறு­கிய கால பொதுத் துறை வேலை­களில் வேலை தேடு­வோ­ரை­யும் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளை­யும் அமர்த்­து­வ­தில் குறி­யாக இருந்­தது இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று அறிக்­கை­ குறிப்­பி­ட்டது.

நீண்ட காலத்­திற்கு நீடிக்­கும் வேலை­களில் அமர்த்­தப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 45 விழுக்­காட்­டுக்கு அதி­க­ரித்­தது. இது ஜூலை இறு­தி­யில் 42 விழுக்­கா­டாக இருந்­தது.

பொருத்­த­மான வேலை­யில் அமர்த்­து­வ­தில் கூடு­தல் நேரம் செல­வி­டப்­ப­டு­வ­தாக அறிக்கை கூறி­யது.