பிரதமர் லீ தொடுத்த அவதூறு வழக்கு: சாட்சியின் சார்பற்ற நிலை, நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார் வழக்கறிஞர் லிம் தியென்

பிரதமர் லீ தொடுத்த அவதூறு வழக்கு: சாட்சியின் சார்பற்ற நிலை, நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார் வழக்கறிஞர் லிம் தியென்

4 mins read
22fe60f5-2665-42a6-a5ac-4b8eef9ece6e
ரு லியோங்­கின் வழக்­க­றி­ஞ­ராக எதிர்க்­கட்சி அர­சி­யல்­வாதி திரு லிம் தியென். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொய்ச் செய்­தி­கள் இன்­னும் வேக­மா­கப் பர­வும் தன்­மை­யு­டை­யவை என்று வலைப்­ப­தி­வா­ள­ருக்கு எதி­ரா­கப் பிர­த­மர் லீ தொடுத்த அவ­தூறு வழக்கு தொடர்­பில் சாட்­சி­யம் அளித்­தார் டாக்­டர் பான் துவான் குவாங். இருப்­பி­னும், சாட்­சி­யின் சார்­பற்ற நிலை மற்­றும் நம்­ப­கத்­தன்மை குறித்­துக் கேள்வி எழுப்­பி­னார் வழக்­க­றி­ஞர் லிம் தியென்.

வலைப்­ப­தி­வா­ளர் திரு லியோங் ஸி ஹிய­னுக்கு எதி­ராக பிர­த­மர் லீ சியன் லூங் தொடுத்­துள்ள அவ­தூறு வழக்கு விசா­ரணை நேற்று இரண்­டா­வது நாளா­கத் தொடர்ந்­தது. திரு லியோங்­கின் வழக்­க­றி­ஞ­ராக எதிர்க்­கட்சி அர­சி­யல்­வாதி திரு லிம் தியென் வாதா­டு­கி­றார்.

நீதி­மன்­றத்­திற்கு நேற்று நிபு­ணத்­து­வச் சாட்­சி­யாக வந்த டாக்­டர் பான், ஹாங்­காங் பல்­க­லைக்­க­ழக வர்த்­த­கப் பள்­ளி­யின் புத்­தாக்­கம் மற்­றும் தக­வல் நிர்­வா­கத் துறை துணைப் பேரா­சி­ரி­யர் ஆவார்.

சமூக ஊட­கம் தொடர்­பில் 15 ஆண்­டு­க­ளுக்கு மேல் ஆராய்ச்சி செய்து வரும் டாக்­டர் பான், அதன் தொடர்­பில் ஆய்­வுக் கட்­டு­ரை­களும் வெளி­யிட்­டுள்­ளார்.

பிர­த­மர் லீ தொடர்­பான 'அதிர்ச்சி'க்கு­ரிய குற்­றச்­சாட்­டு­கள் கொண்ட செய்­தி­யைத் தாங்­கிய ஃபேஸ்புக் பதிவு, பொய்ச் செய்­தி­க­ளைத் திருத்­து­வது தொடர்­பான செய்­தி­க­ளைக் காட்­டி­லும் மேலும் வேக­மா­கப் பர­வும் என்று டாக்­டர் பான் கூறி­னார்.

திரு லியோங்­கின் பதிவு 11,749 பேரின் ஃபேஸ்புக் பக்­கங்­களில் தோன்­றி­யி­ருக்­கும் என்று தாம் மதிப்­பி­டு­வ­தாக நீதி­மன்­றத்­தி­டம் நேற்று சமர்ப்­பித்த அறிக்­கை­யில் டாக்­டர் பான் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

சாட்சியின் அறிக்கை 'ஊகமே'

இருப்­பி­னும், அறிக்கை வெறும் 'ஊகமே' என்று திரு லிம் கூறி­னார். ஃபேஸ்புக் பதிவு தொடர்­பான உண்மை தர­வு­கள் திரு பாங்­கி­டம் இல்லை என்று வழக்­க­றி­ஞர் லிம் சுட்­டி­னார்.

'1எம்­டிபி' தொடர்­பான மோச­டி­யில் கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக்­கு­வ­தில் சிங்­கப்­பூர் வங்­கி­கள் உத­வும் என்று பிர­த­மர் லீயும் முன்­னாள் மலே­சிய பிர­த­மர் நஜிப் ரசாக்­கும் ரக­சிய ஒப்­பந்­தங்­கள் செய்­து­கொண்­ட­தாக 'தி கவ­ரேஜ்' மலே­சிய செய்­தித் தளத்­தில் கூறப்­பட்­டது. இதற்­கான இணைப்பு திரு லியோங் பகிர்ந்த ஃபேஸ்புக் பதி­வில் இருந்­தது.

எளி­தில் மக்­கள் கவ­னத்தை இது­போன்ற செய்­தி­கள் ஈர்க்­கும் என்­றும் உட­ன­டி­யாக அதைப் பகிர்ந்­தி­டச் செய்­யும் என்­றும் டாக்­டர் பான் கூறி­னார். இந்­தப் பதிவு நேற்று வழக்கு விசா­ர­ணை­யின்­போது அலசி ஆரா­யப்­பட்­டது. நூற்­றுக்­க­ணக்­கான சிங்­கப்­பூ­ரர்­கள் பதி­வைப் பார்த்­தி­ருப்­பார்­கள் என்று பிர­த­மர் லீயின் வழக்­க­றி­ஞர்­கள் கூற, அவ்­வாறு நடந்­தி­ருக்­காது என்று மறுத்­தார் திரு லிம்.

குறைந்­த­பட்­சம் சுமார் 200 முதல் 400 சிங்­கப்­பூ­ரர்­கள் திரு லியோங்­கின் பகிர்­வில் இருந்த இணைப்பை 'கிளிக்' செய்­தி­ருப்­பார்­கள் என்று டாக்­டர் பான் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

ஆனால் திரு லிம் இந்­தக் கணிப்­பு­கள் கேள்­விக்­கு­ரி­யது என்று சுட்­டி­னார்.

டாக்­டர் பான் 'எந்த ஒரு தர­வும் இன்றி, அல்­லது ஆதா­ர­மு­மின்றி, கணிப்­பு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட முழு அறிக்கை' ஒன்­றைச் சமர்ப்­பித்­துள்­ள­தாக திரு லிம் கூறி­னார்.

டாக்­டர் பான் அளித்­தது உண்­மை­யில் யூகம் என்­றும் அது நிபு­ணத்­து­வச் சாட்­சி­யம் கிடை­யாது என்­றும் திரு லிம் விவ­ரித்­தார்.

அதற்கு மறுப்பு தெரி­வித்த டாக்­டர் பான், தாம் ஃபேஸ்புக் தளத்­தின் தரவு அறி­வி­யல் குழுக்­க­ளு­டன் மிக விரி­வா­கப் பணி­யாற்­றி­யுள்­ள­தா­க­வும் அவற்­றின் அடிப்­ப­டை­யில் நான்கு ஆய்­வுக் கட்­டு­ரை­களை வெளி­யிட்­டுள்­ள­தா­க­வும் கூறி­னார்.

'சார்பற்ற நிலை' அல்ல

இதற்­கி­டையே டாக்­டர் பான் எந்­தத் தரப்­பை­யும் சாரா­த­வர் என்­பது குறித்­தும் கேள்வி எழுப்­பி­னார் திரு லிம். சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லை­க்க­ழ­கத்­தின் பேரா­சி­ரி­ய­ராக இருந்த டாக்­டர் பான், சிங்­கப்­பூர் அர­சாங்­கம் மற்­றும் அதன் அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்து ஆய்வு மானி­யங்­கள் பெற்­றுள்­ள­தாக திரு லிம் குறிப்­பிட்­டார். டாக்­டர் பானுக்­கும் திரு லீ தலை­மை­யில் இயங்­கிய சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­திற்­கும் இடையே ஓர் உறவு இருந்­த­தைச் சுட்­டி­னார் திரு லிம்.

'திரு லியோங் சாட்சிக்கூண்டில் ஏறப் போவதில்லை'

வழக்கு விசா­ர­ணை­யின் இரண்­டாம் பாதி தொடங்­கி­ய­தும் குறுக்கு விசா­ரணை செய்­யப்­ப­டு­வ­தற்­காக திரு லியோங் சாட்­சிக் கூண்­டில் ஏறப் போவ­தில்லை என்று திரு லிம் நீதி­ப­தி­யி­டம் தெரி­வித்­தார்.

வழக்கை 'அற்­ப­மா­னது மற்­றும் எரிச்­சல் ஊட்­டக்­கூ­டி­யது' என்­றும் அது 'நீதி­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யில் தூக்­கி­யெ­றிப்­பட்டு சிரிக்­கப்­பட வேண்­டிய ஒன்று' என்­றும் கூறி­னார் திரு லிம். மேலும் பிர­த­மர் லீயை நேற்று முன்­தி­னம் குறுக்கு விசா­ரணை செய்­ததே தமக்­குப் போது­மா­னது என்று குறிப்­பிட்­டார் அவர்.

இருப்­பி­னும், வழக்கு விசா­ரணை தொடங்­கி­ய­போது திரு லியோங் குறுக்கு விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யா­வார் என்று திரு லிம் குறிப்­பிட்­டி­ருந்­த­தாக பிர­த­மர் லீயின் வழக்­க­றி­ஞர் திரு தவீந்­தர் சிங் சுட்­டி­னார்.

பிர­த­மர் லீக்கு எதி­ராக நீதி­மன்­றத்­தில் போரா­டு­வது தமக்கு மட்­டு­மல்ல, தமது ஆத­ர­வா­ளர்­கள் மற்­றும் அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கா­க­வும் தான் என திரு லியோங் தமது ஃபேஸ்புக் பதி­வு­க­ளி­லும் பேட்­டி­க­ளி­லும் கூறி­யி­ருந்­த­தை­யும் திரு சிங் குறிப்­பிட்­டார்.

"திரு லீ நீதி­மன்­றத்­திற்கு வந்து சாட்சிக் கூண்­டில் நின்­று­விட்­டார். எந்­தக் கேள்­விக்­கும் அஞ்­சா­மல் தம் நிலை­யைத் தற்­காத்­துக்­கொள்­ளத் தயா­ராக இருக்­கி­றார்.

"ஆனால் நீதி­மன்­றச் செயல்­மு­றையை அவர் அவ­ம­திப்­ப­தா­கக் குற்­றம் சாட்­டு­ப­வர், பின்­வாங்­கி­விட்­டார். இது பெரும் வருத்­தத்­திற்­கு­ரி­யது. ஆனால் எதிர்­பார்த்­த­து­தான்," என்­றார் திரு சிங்.

வழக்கு விசா­ரணை நவம்­பர் வரை­யில் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.