இளம் பெண்ணுக்கு எதிரான கைது ஆணை ரத்து

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்த சம­யத்­தில் சட்­ட­விரோத ஒன்­று­கூ­ட­லில் பங்­கேற்­ற­தற்­காக அக்­லிமா அப்­துல் அஸ்மி, 19, மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது. இருப்­பி­னும், நேற்று முன்­தி­னம் காலை அக்­லி­மா­வின் பெயரை நீதி­மன்ற அதி­காரி அழைத்­த­போது அவர் முன்­னி­லை­யா­காத நிலை­யில் அக்­லிமா மீது பிடி ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து நேற்று முன்­தினம் பகல் வேளை­யில் அக்­லிமா நீதி­மன்­றத்­திற்கு வந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அக்­லி­மா­வைக் கண்­டித்த நீதி­பதி, அவருக்கு $3,000 அப­ரா­தம் விதித்­தார்.

அப­ரா­தத் தொகையை அக்­லிமா கட்­டா­த­தால் 12 நாட்­கள் சிறைத் தண்­ட­னை­யைத் தற்­போது நிறை­வேற்­று­வ­தா­கக் கூறப்­பட்­டது.

கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டத்­தின் கீழ் குற்­றம் புரிந்­ததை ஆகஸ்ட் மாதம் ஒப்­புக்­கொண்­டார் அக்­லிமா. ஜூன் 27ஆம் தேதி­யன்று பியோ கிரெ­சண்ட் புளோக் 42 அருகே உள்ள உடற்­ப­யிற்­சிப் பகு­தி­யில் 13 பேர் கொண்ட கும்­பல் கூடி­யது. அதில் அக்­லி­மா­வும் ஒரு­வர்.

இரவு 9 மணிக்கு அங்­கு கூடிய கும்­பல், போலி­சா­ருக்­குக் குடி­யிருப்­பா­ளர் ஒரு­வர் தக­வல் அளித்­ததை அடுத்து பின்­னி­ரவு 1 மணி அள­வில் கலைந்து சென்­றது. இருப்­பி­னும் 13 பேரும் பிடி­பட்­ட­னர். இவர்­களில் மூவர் மீதான வழக்­கு­கள் இன்­னும் விசா­ர­ணை­யில் உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!