கொவிட்-19: சட்டவிரோதமாக உல்லாசக் கூடத்தை இயக்கிய குற்றத்தை ஆடவர் ஒப்புக்கொண்டார்

இரண்டு மாதக் கிருமி முறி­ய­டிப்­புத் திட்­டம் முடி­வ­டைந்து முதல் கட்­டத் தளர்­வு­கள் தொடங்­கி­ய­போது உல்­லா­சக் கூடங்­க­ளுக்­குத் தொடர்ந்து கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இருப்­பி­னும், ஜாலான் புசா­ரில் உள்ள ஒரு கட்­ட­டத்­தின் மூன்­றாம் தளத்­தில் அமைந்­துள்ள தன் ‘டிரிங்க்­இட்­அப்’ உல்­லா­சக் கூடத்தை லியாவ் கெங் சுன், 39, சட்­ட­விரோ­த­மாக இயக்­கி­ய­தா­க­வும் இரண்டு வாடிக்­கை­யா­ளர்­க­ளை உப­ச­ரிக்க இரு வியட்­னா­மிய பெண்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. கொவிட்-19 கட்­டுப்­பாடு­களை மீறி­ய­தன் தொடர்­பி­லான குற்­றச்­சாட்டை நேற்று லியாவ் ஒப்­புக்­கொண்­டார்.

முதல் கட்­டத் தளர்­வு­க­ளின் போது இயங்கமுடி­யாது என்று அறிந்­தி­ருந்­தும் லியாவ் ஜூன் 2 முதல் தன் வியா­பா­ரத்தை முன்­பதிவு செய்­ப­வர்­க­ளுக்­காக திறந்­த­தா­கக் கூறப்­பட்­டது. ஜூன் 5ஆம் தேதி­யன்று உல்­லா­சக் கூடத்­திற்கு வந்த இரு ஆட­வர்­க­ளைக் கட்­ட­டத்­தின் பின்­வா­சல் வழி­யாக உள்ளே அனு­ம­தித்­தார் லியாவ்.

பின் கட்­ட­டத்­தில் அம­லாக்­கச் சோத­னையை போலி­சார் மேற்­கொண்­ட­போது அனை­வ­ரும் சிக்­கி­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!