வளர்ப்பு மகனைப் பலமுறை துன்புறுத்திய தாயாருக்கு 7 மாத சிறைத் தண்டனை

வளர்ப்பு மக­னைப் பலமுறை துன்­பு­றுத்­திய குற்­றத்­துக்­காக நேற்று மாது ஒரு­வ­ருக்கு ஏழு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 2013ஆம் ஆண்­டில் தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­யர் பணி­யி­லி­ருந்து வில­கிய அந்த 44 வயது மாது, தனி­யார் துணைப்­பாட ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரிந்­த­போது இக்­குற்­றங்­களைச் செய்­த­தா­கக் கூறப்­பட்­டது.

சிறு­வ­னைத் துன்­பு­றுத்­தி­ய­தன் தொடர்­பில் மாது சென்ற மாதம் ஒப்­புக்­கொண்­டதை அடுத்து தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னுக்­குத் தற்­போது 15 வயது. 11 வய­தி­லிருந்து எத்­த­கைய வன்­மு­றைக்­குச் சிறு­வன் ஆளா­னான் என்­பது குறித்து நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது. அவ்­வாறு 2016ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் நடந்த ஒரு சம்­ப­வத்­தில் சாப்­பிட்ட பின் தட்­டைக் கழு­வாத சிறு­வன் மீது கோபங்­கொண்ட மாது, அவன் தலை­யின் பின்­பு­றத்­தில் பீங்­கான் குவளை கொண்டு அடித்­தார். மறு­நாள் கேகே மக­ளிர் மற்­றும் சிறார் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்ற சிறு­வ­னுக்­குத் தையல் தேவைப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மற்­றொரு சம்­ப­வத்­தில், சிறு­வனுக்கு வழங்­கப்­பட்ட ‘நன்­ன­டத்தை விருது’ சான்­றி­தழை மாது கிழித்­தார். அந்த விரு­துக்­குச் சிறு­வன் தகு­தி­யற்­ற­தா­கக் கூறி­யி­ருந்­தார். இச்­சம்­ப­வங்­கள் நடந்­த­போது சிறு­வன் தன் தந்தை, வளர்ப்­புத் தாயான அந்த மாது மற்­றும் அவரது மகள் ஆகி­யோ­ரு­டன் வசித்து வந்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.

2017ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி­யன்று சிறு­வ­னால் ஆங்­கி­ல­மொ­ழித் தேர்­வுக் கேள்வி ஒன்றை நினை­வு­கூர முடி­யா­த­போது மாது சிறு­வ­னைப் பல­முறை அறைந்­தார்.

மறு­நாள் சிறு­வ­னைப் பார்க்க வந்த ஓர் உற­வி­னர், காயங்­க­ளைக் கண்­டார்.

மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­தில் இரண்டு கன்­னங்­க­ளி­லும் காயங்­கள் இருந்­த­து­டன் ஒரு பல்­லும் சற்று சேத­ம­டைந்­தி­ருந்­தது தெரிய வந்­தது.

இதை­ய­டுத்து போலி­சார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். துன்­பு­றுத்­தல் ஓராண்டு காலத்­திற்கு நின்­றது.

ஆனால் மறு­ப­டி­யும் 2018ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி­யன்று மாது சிறு­வ­னின் மூக்­கைக் குத்­தி­ய­தில் ரத்­தம் கசி­யத் தொடங்­கி­யது. மீண்­டும் வீட்டு வேலை தொடர்­பான ஒரு விவ­கா­ரத்­திற்கு மாது இவ்­வாறு செய்­தி­ருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

ஒரு வாரம் கழித்து அடுத்த சம்­ப­வம் நடந்­தது. பள்­ளி­யில் துணைப்­பாட வகுப்­புக்­குச் செல்­லா­த­தால் சிறு­வ­னைப் பல­முறை அறைந்­தார் மாது. சிறு­வ­னின் காயங்­க­ளைக் கவ­னித்த ஆசி­ரி­யர் இது குறித்­துப் பள்­ளித் துணை முதல்­வ­ரி­டம் தெரி­வித்­தார்.

போலி­சா­ருக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. ஜூலை 30ஆம் தேதி­யன்று மருத்­து­வ­ம­னைக்­குச் சிறு­வன் கொண்டு செல்­லப்­பட்டு சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போது சிறு­வ­னின் உட­லில் பல்­வேறு காயங்­கள் இருந்­த­தாக மறு மாதம் வெளி­யி­டப்­பட்ட மருத்­துவ அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது. வளர்ப்பு மக­னைக் கண்­டிக்­கவே தான் இக்­குற்­றங்­க­ளைப் புரிந்­த­தாக மாது கூறி­யி­ருந்­த­தைத் தண்­டனை விதிப்­புக்கு முன் நீதி­பதி குறிப்­பிட்­டார். இருப்­பி­னும் சிறு­வ­னுக்கு எதி­ராக மாது இழைத்த கொடு­மை­யை­யும் சிறு­வ­னுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட காயங்­க­ளை­யும் வைத்­துப் பார்க்­கை­யில் மாது கூறு­வது ‘ஏற்­றுக்­கொள்ள முடி­யாத’ கார­ணம் என்று சுட்­டி­னார் நீதி­பதி.

சிறு­வன் மன்­னித்­து­விட்­ட­தா­கக் கூறித் தம் கட்­சிக்­கா­ர­ருக்கு அப­ரா­தம் விதிக்­கு­மாறு தற்­காப்பு வழக்­க­றி­ஞர் கோரி­னார்.

மாது தற்­போது $8,000 பிணைத் தொகை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். நவம்­பர் 6ஆம் தேதி­யன்று அவர் தன் சிறை­வா­சத்­தைத் தொடங்­கு­வார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!