50 பேர் வரை அனுமதி

ஆண்­டி­று­தித் தேர்­வு­க­ளுக்­குப் பின் தொடக்க, உயர்­நி­லைப் பள்ளி­க­ளி­லும் தொடக்­கக் கல்­லூரி­க­ளி­லும் அதிக இணைப்­பாட நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தொடங்க அனு­மதிக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­து இருக்கிறது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில், அதிக அபா­ய­முள்ள நட­வ­டிக்­கை­கள் தவிர்த்து மற்ற இணைப்­பாட நட­வ­டிக்­கை­களில் 50 பேர் வரை பங்­கேற்க அனு­மதிக்­கப்­ப­டு­வர். இப்­போது 20 பேர் வரை மட்­டுமே அந்­ந­ட­வ­டிக்­கை­களில் பங்­கேற்க முடி­யும்.

கற்­றல் பய­ணங்­கள், கல்வி அமைச்­சின் வெளிப்­புற சாகச கற்­றல் நிலை­யங்­களில் இடம்­பெ­றும் தங்­கி­யி­ருக்­கத் தேவை­யில்­லாத நட­வ­டிக்­கை­கள் உள்­ளிட்ட சில நட­வ­டிக்­கை­கள் இம்­மா­தத்­தின் நடுப்­ப­கு­தி­யில் இருந்து மீண்­டும் தொடங்­கும்.

உள்­ளூர் ‘ஒலிம்­பி­யாட்’ போட்டி­கள், பேச்சு, நாடக நிகழ்ச்­சி­கள் போன்ற பள்­ளி­க­ளுக்கு இடை­யிலான பல நட­வ­டிக்­கை­களும் இம்­மாத நடுப்­ப­கு­தி­யில் இருந்து தொடங்க அனு­ம­திக்­கப்­படும்.

தேசிய பள்ளி விளை­யாட்­டுப் போட்­டி­களும் சிங்­கப்­பூர் இளை­யர் வி­ழா­வும் 2021ஆம் ஆண்­டில் இருந்து மீண்­டும் தொடங்­கும்.

அதே­போல, மாண­வர்­கள் அடுத்த ஆண்­டிலிருந்து சிங்­கப்­பூர் வெளிப்­புறக் கற்­றல் நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்க இய­லும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்துள்ளது.

இருப்­பி­னும், பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களுடன் அந்த நட­வடிக்­கை­கள் இடம்­பெ­றும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

மாண­வர்­க­ளுக்கு இடையே ஒரு மீட்­டர் இடை­வெளி பேணப்­பட வேண்­டும். விளை­யா­டும்­போது மாண­வர்­கள் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க மாட்­டார்­கள் என்­ப­தால் அப்­போது அவர்­க­ளுக்கு இடையே குறைந்­தது இரண்டு மீட்­டர் இடை­வெளி இருக்க வேண்­டும்.

ஒரு மீட்­டர் இடை­வெளி விதி­யைக் கடைப்­பி­டிக்க முடி­யாத நட­வடிக்­கை­களில், ‘ஐவர் குழு’ விதி பின்­பற்றப்பட வேண்­டும்.

ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யின் முடி­வி­லும், குழுக்­கள் மாற வேண்­டும்; அடிக்­கடி தொடக்­கூ­டிய பகுதி­களும் பொது­வான வச­தி­களும் துடைக்­கப்­பட வேண்­டும்.

மாண­வர்­க­ளின் சமூக, உணர்­வு­சார் நல்­வாழ்­விற்­கும் முழு­மை­யான வளர்ச்­சிக்­கும் இணைப்­பாட நட­வ­டிக்கை அனு­ப­வங்­களும் பள்ளி நட­வ­டிக்­கை­களும் முக்­கி­ய­மான கார­ணி­க­ளா­கத் திகழ்­கின்­றன என்று அமைச்சு கூறி­யுள்­ளது.

“அதிக நாட்­டமுள்ள நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்­க­வும் தோழமை உணர்வை, நற்­பண்­பு­களை, மீள்­தி­றனை வளர்க்­க­வும் மன­ந­லத்தை வலுப்­ப­டுத்­த­வும் இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள் மாண­வர்­க­ளுக்கு வாய்ப்­பு­க­ளை­யும் தளங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தித் தரு­கின்­றன,” என்று அமைச்சு தெரி­வித்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!