தென்கொரியாவுடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் அமைக்க அதிக ஆதரவு

சிங்­கப்­பூர், தென்­கொ­ரி­யா­வு­டன் கொரோனா தடுப்பு பாது­காப்பு வளை­யம் (ஏர் டிரா­வல் பபுல்) அமைத்­துக்கொள்ள வேண்­டும் என அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இது தொடர்­பாக நடத்­தப்­பட்ட கருத்­தா­ய்வில், தென்­கொ­ரி­யாவை 40.7 விழுக்­காட்­டி­னர் தேர்வு செய்­தனர். ஜப்­பான் (17.7%), தாய்­லாந்து (16.9%) ஆகிய நா:டு­கள் அடுத்த இரண்டு இடங்­க­ளைப் பிடித்­தன.

மலே­சியா (11.6%), நியூ­சி­லாந்து (8.6%), சீனா (4.5%) ஆகி­யவை பட்­டி­ய­லில் இடம்­பி­டித்­துள்ள மற்ற நாடு­கள்.

கட்­டுப்­பா­டற்ற பொதுப் பய­ணங்­களை மேற்­கொள்ள ஏது­வாக, பாது­காப்­பான நாடு­க­ளு­டன் அல்­லது வட்­டா­ரங்­க­ளு­டன் கொரோனா தடுப்பு பாது­காப்பு வளை­யங்­களை அமைப்­பது தொடர்­பில் சிங்­கப்­பூர் பேச்­சு­வார்த்தை நடத்­தும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று முன்தினம் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, ‘தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளி­தழ் ஃபேஸ்புக் வழி­யாக இந்­தக் கருத்­தாய்வை நேற்று நடத்­தி­யது. ஆறா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் இந்த ஆய்­வில் பங்­கேற்று தங்­க­ளது கருத்­து­க­ளைப் பதி­வு­செய்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!