கடனைச் செலுத்த அவகாசம்: 90% விண்ணப்பங்கள் ஏற்பு

கடந்த ஆகஸ்ட் மாத இறுதி நில­வரப்­படி, சொத்­துக் கட­னைக் காலந்­தாழ்த்­தித் திருப்பிச் செலுத்த அனு­மதிக்­கக் கோரி வங்­கி­க­ளுக்கு 38,900 விண்­ணப்­பங்­கள் வந்­தன என்­றும் அவற்­றில் கிட்­டத்­தட்ட 90% விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன என்­றும் மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் தெரி­வித்­து இருக்கிறார்.

அவ்­வாறு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விண்­ணப்­பங்­களில் ஏறக்­கு­றைய 26,000 விண்­ணப்­பங்­கள் வீட்­டுக்­கடன் தொடர்­பா­னவை.

இதன்­ காரணமாக $20 பில்­லி­யன் மதிப்­பி­லான கடன் தவ­ணைத்­தொகை காலந்­தாழ்த்­திச் செலுத்­தப்­படும் என்றார் திரு தர்­மன்.

புக்­கிட் பாத்­தோக் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முரளி பிள்­ளைக்கு எழுத்­து­வழி அளித்த பதி­லில் திரு தர்­மன் இந்­தப் புள்ளி­வி­வ­ரங்­க­ளைக் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஆயுள், சுகா­தா­ரக் காப்­பு­று­தி­யைப் பொறுத்­த­மட்­டில், சந்தா செலுத்­து­வ­தைத் தள்­ளி­வைக்­கக் கோரி 32,700 விண்­ணப்­பங்­கள் வங்­கி­க­ளுக்கு வந்­தன என்­றும் அவற்­றில் 90% விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன என்­றும் மூத்த அமைச்­சர் தர்­மன் தெரி­வித்­தார்.

காலந்­தாழ்த்­திச் செலுத்த அனு­மதிக்­கப்­பட்ட காப்புறுதிச் சந்­தாத் தொகை­யின் மொத்த மதிப்பு $66 மில்­லி­யன் எனக் கூறப்­பட்­டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!