சிங்கப்பூர் கடற்கரைகளில் நீரின் தரம் பற்றி வாரந்தோறும் தகவல்

சிங்கப்பூர் கடற்கரைகளில் நீரின் தரம் பற்றி வாரந்தோறும் தகவல்

1 mins read

சிங்­கப்­பூர் கடற்­க­ரை­க­ளுக்­குச் செல்­வ­தற்கு முன் அங்கு நீரின் தரத்­தைப் பற்றி தெரிந்­து­கொள்ள புதிய வசதி ஏற்­ப­டுத்­தித் தரப்­பட்டுள்­ளது.

இங்­குள்ள ஒன்­பது கடற்­க­ரை­களில் நீரின் தரம் குறித்த மதிப்­பீ­டு­களை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் வாரந்­தோ­றும் வழங்­கு­கிறது. அதோடு சேர்த்து, நீரில் உள்ள ஒரு­வகை 'பாக்­டீ­ரியா' அள­வின் அடிப்­ப­டை­யில் ஆலோ­ச­னைக் குறிப்­பை­யும் வாரி­யம் வழங்­கு­கிறது. செந்தோசாவின் சிலோசோ கடற்கரை, பலாவான் கடற்கரை, தஞ்சோங் கடற்கரை, சிலேத்தார் தீவு கடற்கரை, செம்பவாங் பூங்கா கடற்கரை, சாங்கி கடற்கரை, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்கரை, பாசிர் ரிஸ் கடற்கரை, பொங்கோல் கடற்கரை ஆகியன அந்த ஒன்பது கடற்கரைகள்.