தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் மேலும் மூவர்

2 mins read
338ea7ad-5515-4bb1-b2eb-c212f3bf825c
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் பெரும் செல்­வந்­தர்­கள் பட்­டி­ய­லில் புதி­தாக மூவர் இணைந்­துள்­ள­னர். செல்­வத்­தின் மொத்த மதிப்­பாக குறைந்­தது $1 பில்­லி­யன் வைத்­தி­ருப்­போர் பெரும் செல்­வந்­தர்­க­ளாக அழைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூரில் மொத்­தம் 25 பெரும் செல்­வந்­தர்­கள் உள்­ள­னர். இங்குள்ள பெரும் செல்­வந்­தர்­க­ளின் மொத்த மதிப்பு கடந்த ஏப்­ரல் மாதம் 11 விழுக்­காடு கூடி 79.1 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை எட்­டி­யி­ருந்­தது.

ஏப்­ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் அவர்­க­ளது செல்­வத்­தின் மொத்த மதிப்பு மேலும் 30 விழுக்­காடு கூடி 102.6 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை எட்­டி­யது.

அதே கால­கட்­டத்­தில் பங்­குச்­சந்­தை­கள் எழுச்சி பெற்­றதே பெரும் பணக்­கா­ரர்­க­ளின் செல்­வத்­தின் மதிப்பு கிடு­கி­டு­வென அதி­க­ரிக்­கக் கார­ணம்.

இந்­நி­லை­யில், உல­கி­லேயே ஆசி­யா­வில்­தான் பெரும் செல்­வந்­தர்­க­ளின் எண்­ணிக்கை ஆக அதி­கம் என்று 'யுபி­எஸ்', 'பிரைஸ்­வாட்­டர்­ஹ­வுஸ்­கூப்­பர்ஸ்' நிறு­வ­னங்­கள் நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

ஆசிய பசி­பிக் பகு­தி­யில் பெரும் செல்­வந்­தர்­க­ளின் எண்­ணிக்கை புதிய உச்­ச­மாக 831ஐ எட்­டி­யுள்­ளது. உல­கம் முழு­வ­தும் உள்ள பெரும் செல்­வந்­தர்­க­ளின் எண்­ணிக்கையில் இது 38 விழுக்­காடு ஆகும்.

அவர்­க­ளின் ஒட்­டு­மொத்த செல்­வத்­தின் மதிப்பு 3.3 டிரில்­லியன் அமெ­ரிக்க டாலர் (S$4.49 டிரில்­லி­யன்) ஆகும். ஒவ்­வொ­ரு­வரி­ட­மும் இருக்­கும் செல்­வத்­தின் மதிப்பு சரா­ச­ரி­யாக 4 பில்­லி­யன் டாலர்.

உல­கம் முழு­வ­தும் 43 சந்­தை­களில் 2,000க்கும் அதி­க­மான பெரும் செல்­வந்­தர்­க­ளின் விவ­ரங்­கள் ஆரா­யப்­பட்டு இந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஆசியா முழு­வ­தும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, தொழில்­நுட்­பத் துறை­களில் மட்­டும் 181 பெரும் செல்­வந்­தர்­கள் உள்­ள­னர்.

இந்தத் துறைகளில்தான் ஆக அதிக எண்ணிக்கையிலான பெரும் செல்வந்தர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பசி­பிக் பகு­தி­யில் உள்ள பெரும் செல்­வந்­தர்­களில் 81 விழுக்­காட்­டி­னர் தங்­க­ளது வாழ்­நா­ளில் சுய­மாக செல்­வத்­தைச் சேர்த்­தவர்­கள். ஆசியாவில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகளை இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

குறிப்­பி­டும்­ப­டி­யாக, ஆசி­யா­வில் பெண் செல்­வந்­தர்­க­ளின் எண்­ணிக்கை இவ்­வாண்டு 68ஆக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. 2013ஆம் ஆண்டு அது 26ஆக இருந்­தது.