உடற்பயிற்சி வழி வசதி குறைந்தோருக்கு நன்கொடை மாணவர்களுக்கான நூதன ஏற்பாடு

உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் மாணவர்கள் வசதி குறைந்தோருக்கு அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டியுள்ளனர். யு நேங் தொடக்கப்பள்ளின் 85 வயது நிறைவாண்டு விழாவையும் பிள்ளைகள் தினத்தையும் கொண்டாடுவதற்காக அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு விறுவிறுப்பான, ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஆடல் நிகழ்ச்சி, வாலிபால், தரைப்பந்து, பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பாதுகாப்பு இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினர். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் அவர்கள் செய்யும் உடற்பயிற்சிக்கு 3எம் நிறுவனம் நன்கொடை அமைப்புக்கு ஒரு பொருளை வழங்கும்.

“இந்நிகழ்ச்சியில் பங்கேற்றத்தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று தொடக்கநிலை நான்கு மாணவி சிம்சா ரூபன் தெரிவித்தார்.”சக மாணவர்களோடு உல்லாசமாக விளையாடும் அதே நேரத்தில் வசதி குறைந்தோருக்கு என்னால் உதவ முடிகிறது,” என்று அந்த 10 வயது சிறுமி கூறினார்.

‘3எம் மூவ்ஸ் அட் சவுத் ஈஸ்ட் இனிஷியேட்டிவ்’ (3M Moves @ South East initiative) திட்டத்தை மாணவர்களின் முயற்சிகள் ஆதரிக்கின்றன. செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதிவரை இந்தத் திட்டம் முதியோருக்காகவும் வசதி குறைந்தோருக்காகவும் 110, 000 வெள்ளி மதிப்பிலான பொருட்களைத் திரட்ட முற்படுகிறது.

வர்த்தகங்களைச் செயல்பட வகைசெய்வது சமூகம் என்பதால் சமூகத் தொண்டு செய்வது வர்த்தகங்களின் கடமை என 3எம் நிறுவனத்தின் தலைவர் திரு மெக்குய்கன் தெரிவித்தார்.
அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!