தேர்தலில் உள்ளூர் ஊடக இணையத்தளங்களின் முக்கியத்துவம் கூடியது

சிங்­கப்­பூ­ரில் நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லின்போது உள்­ளூர் ஊடக இணை­யத்தளங்­கள் போன்ற மின்­னி­லக்க தளங்­க­ளின் முக்­கியத்­து­வம் கூடி­யது. கொள்கை ஆய்­வுக் கழ­கத்தின் ஓர் ஆய்வு இவ்­வாறு தெரி­விக்­கிறது.

அதே நேரத்­தில், தொலைக்­காட்சி, செய்­தித்­தாள், வானொலி போன்ற வழி­வ­ழி­யான ஊட­கத்தை நாடிய வாக்­கா­ளர்­க­ளின் விகி­தாச்­சா­ரம் 2015 தேர்­த­லு­டன் ஒப்­பி­டும் போது குறைந்து இருப்­ப­தாக அந்த ஆய்­வுக் கழ­கத்­தின் மூத்த ஆய்­வா­ளர் கேரல் சூன் தெரி­வித்தார்.

இவர் இணை­யம் மற்­றும் ஊடக பய­னீடு என்ற இணை­யக் கருத்­தரங்­கில் நேற்று ஆய்வு முடி­வு­களை வெளி­யிட்­டார்.

ஆய்­வில் உள்­ள­டக்­கப்­பட்ட 2,018 வாக்­கா­ளர்­க­ளைப் பார்க்­கை­யில் ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம் போன்ற சமூ­கக் கட்­ட­மைப்­புத் தளங்­களும் வாட்ஸ்­அப் போன்­ற­வை­யும் மிக­வும் பிர­ப­ல­மாக இருந்த இரண்டு தளங்­கள் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

பல தலை­மு­றை­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு இடை­யில் மின்­னி­லக்­கத்­தைப் பொறுத்தவரை நிறைய இடை­வெளி இருக்­கிறது என்று கூறப்­படும் கருத்தை நிரா­க­ரிக்­கும் வகை­யில் 56 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்­ள­வர்­கள் இன்ஸ்­ட­கி­ராமை பயன்­ப­டுத்தி அர­சி­யல் கட்­சி­க­ளைப் பற்­றி­யும் வேட்­பா­ளர்­களைப் பற்­றி­யும் தெரிந்­து­கொண்­டார்­கள்.

மக்­கள் செயல் கட்­சிக்கு வாக்­களித்­தோரைப் பொறுத்தவரை, நான் எப்­போ­துமே அதே கட்­சிக்­குத்­தான் வாக்­க­ளிப்­பேன். அந்­தக் கட்சி பல சாத­னை­களை நிகழ்த்தி இருக்­கிறது என்­ப­து­தான் முக்­கி­ய­மா­ன­தாக இருந்­தது.

எதிர்த்­த­ரப்­புக்கு வாக்­க­ளித்­த­வர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் மாற்­றுக் குர­லைக் கேட்க விரும்­பி­ய­தும் ஒரே கட்­சியை விரும்­பா­த­தும் முக்­கிய கார­ண­மாக இருந்­தது.

இத­னி­டையே, சமூக ஊடக புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வந்த 4 எச்­ச­ரிக்கை அறி­கு­றி­களில் அர­சி­யல் கட்­சி­கள் அதிக கவ­னத்­தைச் செலுத்தி இருந்­தால் தேர்­தல் முடி­வு­கள் வியப்­ப­ளிக்­கும் ஒன்­றாக இருந்­தி­ருக்­காது என்று ‘அன­லிட்­டிக்ஸ் லாப்ஸ்’ என்ற நிறு­வ­னத்­தின் கணி­னித் தக­வல் பகுப்­பாய்­வுத் துறைத் தலை­வர் சுவா சின் ஹோன் கூறு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!