மின்னிலக்கப் பரிவர்த்தனை உள்ளிட்ட நவீன மின்னிலக்க முறைகளை கையாள சுமார் 20,000 உணவு, பான சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு உதவ புதிய மின்னிலக்கச் செயல் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. தொடர்பு தகவல் மூத்த துணை அமைச்சர் திருவாட்டி சிம் ஆன், வர்த்தக தொழில் துணை அமைச்சர் திருவாட்டி லோ யென் லிங் இருவரும் 'ஹாட்லாண்ட்ஸ் கோ' என்ற மின்னிலக்கத் திட்டத்தை தொடங்கிவைத்தனர். அவர்கள் 'அம்மன் ஹவுஸ்ஹோல்டு சப்ளைஸ் பிரைவேட் லிமிட்டெட்' நிறுவனத்துக்கு நேற்று வருகை அளித்தனர். அப்போது சங்கர் (இடது), அன்பு (இடமிருந்து 2வது) ஆகியோருடன் அமைச்சர்கள் உரையாடினர்.
20,000 நிறுவனங்கள் மின்னிலக்க பரிவர்த்தனைக்கு மாற உதவி
1 mins read
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

