பூன் லே கத்தி வெட்டு சம்பவம்: இன்று குற்றம் சுமத்தப்படும்

பூன் லே கத்தி வெட்டு சம்பவம்: இன்று குற்றம் சுமத்தப்படும்

1 mins read
af3769d1-7dee-466e-b414-8a2a58d597b3
இந்த இடத்தில் தான் 23 வயது ஆடவர் தலையிலும் முகத்திலும் தாக்கப்பட்டார். தரையில் ரத்தம் சிந்திக் கிடந்தது. -

பூன் லே கடைத்தொகுதியில் உள்ள ஃபேர்பி­ரைஸ் கடை­யில் கத்­தி­யைக் கொண்டு ஒரு­வ­ரைத் தாக்­கி­ய­தா­கக் கூறப்­பட்ட பதின்ம வயது இளை­ஞர் இன்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆபத்­தான ஆயு­தத்­தால் வேண்­டு­மேன்றே கடு­மை­யா­ன­ கா­யம் விளை­வித்­த­தாக அந்த 18 வயது இளை­ஞர் மீது குற்­றம் சுமத்­தப்­படும்.

அந்­தப் பேரங்­கா­டி­யில் கடந்த புதன்­கி­ழமை பிற்­ப­கல் சுமார் 12.40 மணிக்கு நிகழ்ந்த அந்­தச் சம்­ப­வத்­தில் 23 வயது ஆட­வர் முகத்­தி­லும் தலை­யிலும் காயமடைந்­தார்.

பிரத்­யே­கப் படச்­சா­த­னங்­களின் உதவி­யோ­டும் பல­ரி­டம் விசா­ரணை நடத்­தி­யும் சந்­தே­கப் பேர்வ­ழியை அடை­யாளம் கண்டு அதே நாளன்று அவ­ரை ஜூரோங் போலிஸ் பிரிவு அதி­கா­ரி­கள் கைது செய்­த­தாக போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மன நலக் கழகத்தில் விசா­ர­ணைக் காவ­லில் வைத்து அந்த இளை­ஞ­ரின் மன நிலையை மதிப்­பிட உத்­த­ர­வி­டும்­படி அர­சு தரப்­பு­டன் சேர்ந்து நீதி­மன்­றத்­துக்கு வேண்­டு­கோள் விடுக்­கப்­போ­வ­தாக போலிஸ் கூறி­யது.

ஆபத்­தான ஆயு­தத்­தைக் கொண்டு வேண்­டு­மென்றே காயம் ஏற்­ப­டுத்­தி­னால் ஆயுள் தண்­டனை விதிக்க இடம் உண்டு.

ஆயுள் தண்­டனை இல்லை எனில் சிறைத் தண்­ட­னை­யு­டன் அப­ரா­தம், பிரம்­படி ஆகி­ய­வை­யும் சேர்ந்து கிடைக்­கக்­கூ­டும்.