90 முறை முதலாளியை குத்திக் கொன்ற பணிப்பெண்: கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை

திரு­வாட்டி சியோவ் கிம் சூ, 59, என்ற ஒரு மாதை அவ­ரின் தெலுக் குரோவ் வீட்­டில் 2016 ஜூன் 7ஆம் தேதி இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த தர்­யாத்தி என்ற பணிப்­பெண் 90 முறை கத்­தி­க­ளால் குத்­திக் கொன்­று­விட்­டார்.

மூன்று குத்­து­கள் திரு­வாட்டி சியோ­ முகத்­தின் எலும்­பு­கள் முறிந்­து­வி­டும் அள­வுக்கு வேக­மாக இறங்கின. கட்­டாய மரண தண்­டனை விதிக்­கத்­தக்க குற்­றச்­சாட்டை பணிப்பெண் முத­லில் எதிர்­நோக்­கி­னார். ஏப்­ர­லில் 17 நாட்­கள் விசா­ரணை நடந்­தது.

அதை­ய­டுத்து, கடுமை குறைந்த கொலைக் குற்­றச்­சாட்டு அவர்­ மீது சுமத்­தப்­பட்டது. அதன் பேரில் அவ­ரும் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். குற்­ற­வாளி என்று தீர்ப்­பளிக்கப்பட்டால் பணிப்­பெண்­ணுக்கு ஆயுள் தண்­டனை அல்­லது மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம் என்ற நிலை இருந்­தது.

ஆனால் மரண தண்­டனை விதிக்க வேண்­டும் என்று தாங்­கள் கேட்­கப்­போ­வ­தில்லை என்று அர­சு தரப்பு தெரி­வித்­தது. இதை­ய­டுத்து அந்த பணிப்பெண் குற்­ற­வாளி என்று தீர்ப்­பளிக்கப்பட்டால் ஆயுள் தண்­டனை விதிக்­கப்­ப­டக்­கூ­டிய சூழலை எதிர்­நோக்­குவார்.

இந்த நிலை­யில் இந்த வழக்­கில் சென்ற மாதம் ஒரு திருப்­பம் ஏற்­பட்­டது. குற்­றத்தை ஏற்­றுக்­கொண்­டதை பணிப்­பெண் மீட்­டுக்­கொண்­டார்.

என்ன செய்­கி­றோம் என்­ப­தை தெரிந்­து­கொள்ள முடி­யாத அளவுக்கு தான் மன­நிலை பாதிப்­புக்கு ஆளாகி இருந்­த­தாக நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யாகி வாதி­டும்­படி தற்­காப்பு தரப்பு மனோ­வி­யல் வல்­லு­நர் டாக்­டர் டோமி டான் என்­பவரை பணிப்பெண் கேட்­டுக்­கொண்­டார்.

இதன் மூலம் தனக்கு விதிக்­கப்­படும் தண்­டனை குறை­வாக இருக்­கும் என்று அவர் நம்­பு­கிறார்.

வழக்கு விசா­ரணை அடுத்த ஆண்டு நடக்­கும். அப்­போது டாக்­டர் டானும் அர­சு தரப்பு மனோ­வி­யல் வல்­லு­நர் டாக்­டர் ஜேதிப் சர்கார் என்­ப­வ­ரும் சாட்­சி­யம் அளிப்­பார்­கள்.

இந்­நி­லை­யில், திரு­வாட்டி சியோவை கொடூ­ர­மாக தாக்க அந்தப் பணிப்பெண் தயா­ரா­னது எப்­படி என்­பது நேற்று நடந்த விசா­ரணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

முத­லா­ளி­யி­டம் இருந்து தன்­பாஸ்­போர்ட்டை பெறு­வ­தற்குப் பணிப்­பெண் முயன்­றார். இதற்­காக அவர் அந்த மாதைத் தாக்க ஆயத்­த­மா­னார். ஒரு கத்­தியைக் கூர்­தீட்­டி­னார். மற்­றொரு கத்­தியை கழி­வறைத் தொட்­டிக்­குக் கீழே பதுக்கி வைத்­தார். வேறு ஒரு பெரிய கத்­தியையும் திரு­வாட்டி சியோ­வைத் தாக்க அவர் பயன் படுத்தினார்.

அப்­போது தன் செய்­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­தக் கூடிய நிலை­யில்­தான் பணிப்­பெண் இருந்­தார் என்­றும் அவ­ருக்கு மன­நிலை பாதிப்பு எது­வும் இல்லை என்­றும் அர­சாங்க தரப்பு வாதிட்­டது. இதை பணிப்­பெண் ஒப்­புக்­கொள்­ள­வில்லை.

“நான் எனது பாஸ்­போர்ட்டை பெறவே விரும்­பி­னேன். கோபத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. என் கைக­ளை­யும் கட்­டுப்­படுத்த முய­வில்லை,” என்று அந்­தப் பணிப்­பெண் சாட்­சி­யம் அளித்­தார். திரு­வாட்டி சியோவை கொலை செய்ய பணிப்­பெண் ஆயத்­த­மா­ன­தைக் காட்­டும் வாக்­கு­மூ­லங்­களை போலிஸ் தாக்­கல் செய்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!