இணையப் பாதுகாப்பு நியதி: சிங்கப்பூர்-ஐநா ஒத்துழைப்பு

இணைய உல­கில் நாடு­கள் பொறுப்­பு­டன் நடந்துகொள்­ள­வும் இணை­யப் பாது­காப்­புக்­கும் தேவையான நிய­தித் தொகுப்பை நடை­மு­றைப்­படுத்த உலக நாடு­கள் எடுக்­க­வேண்­டிய முயற்­சி­கள் அடங்­கிய ஒரு பட்­டியலை உரு­வாக்க ஐநா­வுடன் சிங்­கப்­பூர் ஒத்­து­ழைக்­கும்.

தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் நேற்று இதனை அறி­வித்­தார். கொவிட்- 19 கார­ண­மாக மின்­னி­லக்க உரு­மாற்­றம் வேகம் பிடித்து இருப்­ப­தைச் சுட்­டிய அமைச்­சர், இந்­தச் சூழ­லில் இணையப் பாது­காப்­பில் உலக ஒத்­து­ழைப்­பின் முக்­கி­யத்­து­வம் கூடியிருப்­ப­தா­கத் தெரிவித்­தார்.

மின்­னி­லக்க முன்­னேற்­றங்­கள், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் வளர்ச்சி ஆகி­ய­வற்­றின் நன்­மை­களை அனைத்­து­லக நாடு­கள் அங்­கீ­கரித்து இருப்­ப­தா­க­வும் காணொளி வழி நடந்த கூட்­டத்­தில் அவர் தெரி­வித்­தார்.

என்­றா­லும் இந்த முன்­னேற்­றத்­துக்கு ஆத­ர­வாக பாது­கா­ப்­பான, நம்­ப­கத்­தன்மைமிக்க மின்­னி­லக்க ஏற்­பாடு இருப்­பதை உறு­திப்­ப­டுத்த அனைத்­து­லக அள­வில் ஒத்­துழைப்பு தேவைப்­ப­டு­கிறது என்­பதை உலக நாடு­கள் வலி­யு­றுத்தி உள்ளதாகவும் அமைச்­சர் கூறினார்.­

இணைய உல­கில் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்ள 11 நிய­தி­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அவை கட்­டா­ய­மானதல்ல என்­றா­லும் அவற்றை நாடு­கள் அமல்­ப­டுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­படு­கிறது.

ஐநா அரசாங்க வல்­லு­நர்­கள் குழு ஒன்று 2015ல் முன்­வைத்த ‘நிய­தி­கள் அம­லாக்­கப் பட்­டி­யல்’ என்ற அந்த நிய­தித் தொகுப்பை ஐநா நாடு­கள் அங்­கீ­க­ரித்துள்ளன.

இவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த ஆசி­யான் அமைப்பு சென்ற ஆண்டு ஒரு பட்­டி­யலைத் தயார் செய்­தது. அதைப் பலப்­ப­டுத்தி நிய­திப் பட்­டி­யல் ஒன்றை உரு­வாக்க இப்­போது முயற்­சி­கள் இடம்பெறு­கின்­றன.

அந்­தப் பட்­டி­யல், பல ஐநா அமைப்பு நாடு­க­ளுக்­குத் தோதாக சீர­மைக்­கப்­படும் என்­றும் இதில் நாடு­க­ளின் தேசிய முன்­னு­ரி­மை­களும் ஆற்­றல்­களும் கவ­னத்­தில் எடுத்­துக்கொள்­ளப்­படும் என்றும் திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

இந்த நிய­தி­களை நடை­மு­றைப்­படுத்த தேவைப்­படும் முயற்­சி­கள் யாவை என்­பதை குறிப்­பாக வள­ரும் நாடு­களும் தெரிந்­து­கொள்­ளும் வகை­யில் ஆசி­யான் தன்­னு­டைய அனு­ப­வங்­க­ளை­யும் அறி­வை­யும் ஐநா­வு­டன் பகிர்ந்­து­கொள்­ளும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!