விநியோக ஊழியர்களுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு கட்டாயம்

1 mins read
3b0fb7d9-9b3e-4571-ab25-c2c851c23532
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மின்­சார சைக்­கிள், மோட்­டார் பொருத்­தப்­பட்ட சக்­கர நாற்­கா­லி­போன்ற தனி­ந­பர் நட­மாட்­டச் சாதனங்­க­ளைப் பொது வழி­களில் பயன்­ப­டுத்­தும் விநி­யோக ஊழியர்­களை வேலை­யில் அமர்த்­தும் நிறு­வ­னங்­கள், தங்­கள் ஊழி­யர்­களுக்கு டிசம்­பர் முதல் மூன்­றாம் தரப்பு காப்­பு­று­திப் பாது­காப்பு இருக்­கிறது என்­பதை உறு­திப்­படுத்த வேண்­டும்.

ஊழி­யர்­கள் வேலை­யில் காயம் அடைந்­தாலோ, மர­ண­ம­டைந்­தாலோ அந்­தக் காப்­பு­றுதி பாது­காப்பு துணை­யாக இருக்­கும்.

மோட்­டார் பொருத்­தப்­பட்ட தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­களை வாட­கைக்­கு­விட உரிமை பெற்­றி­ருக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் இந்த விதி பொருந்­தும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்து இருக்­கிறது.