மனநலப் பிரச்சினை: பெரும்பாலான இளையர்கள் வெளியில் சொல்ல சங்கடப்படுகின்றனர்

1 mins read
03151d12-fd01-479f-8bae-2eabc0353bb5
18 முதல் 24 வரை வய­துள்ள பிரிவி­ன­ரில் பல­ரும் மனநலப் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி வெளிப்படுத்தத் தயங்குவதாகத் தெரிய வந்துள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆசிய பசி­பிக்­கில் கொவிட்-19 கார­ண­மாக நெருக்­க­டி­கள், மன உளைச்­சல் அதி­க­மா­கின்­றன. ஆனா­லும் 18 முதல் 24 வரை வய­துள்ள பிரிவி­ன­ரில் பல­ரும் மனநலப் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி வெளிப்படுத்த இன்­ன­மும் படா­த­பாடுபடு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூர், ஆஸ்­தி­ரே­லியா, சீனா, ஹாங்­காங்­கில் வசிக்­கும் இந்த வயது தலை­மு­றை­யைச் சேர்ந்த 1,226 பேரை உள்­ள­டக்கி ஆய்வு நடத்­தப்­பட்­டது.

கொவிட்-19 கார­ண­மாக தங்­களுக்கு உளைச்­சல் அதி­க­ரித்­து­விட்­டதாக அவர்­களில் 73% கூறி­னார்­கள். மனநலன் மோச­மா­கி­விட்­ட­தாக 57% தெரி­வித்­த­னர்.

மன உளைச்­சல் மாதத்தில் குறைந்தது ஒரு தடவையாவது மிக மோசமாகிவி­டு­கிறது என்று சுமார் 80% கூறி­னர். வாரா­வா­ரம் இந்த நிலை ஏற்­படு­வ­தாக 28% தெரி­வித்­த­னர். அன்­றா­டம் இதே பிரச்­சினை என்று கூறி­ய­வர்­கள் 11%.

ஆனால் 41% மட்­டுமே தங்­கள் மனநலப் பிரச்­சினை பற்றி விவா­திக்க முன்­வந்­த­னர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.