முரசொலி: மிகவும் சவால்மிக்க காலகட்டத்தில் வேலைகளும் வாய்ப்புகளும்

முரசொலி: மிகவும் சவால்மிக்க காலகட்டத்தில் வேலைகளும் வாய்ப்புகளும்

4 mins read
89a9094d-3b8b-4931-9dd2-e918248b1ee7
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் வேலை நில­வ­ரங்­க­ளைப் பொறுத்த வரை இப்­போ­தைய கால­கட்­டம் மிக­வும் சவால்­மிக்க ஒன்­றா­கத் தெரி­கிறது. கொவிட்-19 கார­ண­மாக இது­வ­ரை­யில் தாங்­கள் நினைத்­துக்­கூட பார்த்­தி­டாத சூழ்­நி­லையை ஊழி­யர்­கள் எதிர்­நோக்­கு­கி­றார்­கள்.

ஏரா­ள­மான மக்­க­ளுக்கு வேலை போய்­விட்­டது. ஆட்­கு­றைப்புக்கு ஆளா­ன­வர்­கள் அதி­க­ரித்து இருக்­கி­றார்­கள். பல­ரும் சூழ்­நி­லைக்­கேற்ப மாறிக்­கொண்டு கிடைத்த வேலை­யைப் பற்­றிக்கொண்டு வருகி­றார்­கள். மற்­ற­வர்­களோ வேலை­யை இழந்து புதிய சூழ­லுக்கு ஏற்ப மாறிக்­கொள்ள முடி­யா­ம­ல் செய்வதறியாது தவிக்­கி­றார்­கள்.

இன்­னும் ஒரு பிரி­வி­னர் இப்­போ­தைய வாய்ப்பு­களைப் பயன்­ப­டுத்தி புதுப்­புது தேர்ச்­சி­க­ளைக் கற்றுக்­கொண்டு எதிர்­கா­லத்­துக்கு ஆயத்­த­மாக மிக­வும் நாட்­டத்­து­டன் செயல்­ப­டு­கி­றார்­கள். கணி­ச­மா­ன­வர்­கள் இது­வ­ரை­யில் நாம் பார்த்து வந்த வேலை­கள் இனி முற்­றி­லும் இல்­லா­ம­லேயே போய்­வி­டுமோ என்ற கவ­லை­யில் மூழ்கி இருக்­கி­றார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த புதன்­கி­ழமை வேலைச் சூழ்­நிலை பற்­றிய ஆகப் புதிய அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. அந்த அறிக்கை கவ­லை தரு­வ­தா­கத்­தான் இருக்­கிறது என்­றா­லும் மன­தில் நம்­பிக்கை துளிர் விடு­வ­தற்­கான அறி­கு­றி­களும் அதில் காணப்­படு­கின்­றன.

ஊழியர் சந்தை தலை­யெ­டுக்­கிறது என்ற நம்­பிக்­கையை அந்த அறிக்கை ஓர­ள­வுக்கு கொடுத்து இருக்­கிறது. சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் ஆகி­யோ­ரில் வேலை இல்­லா­த­வர்­கள் விகி­தம் ஆகஸ்ட் மாதம் 4.5 விழுக்­கா­டா­கக் கூடி­ இருக்கிறது.

ஜூலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த அளவு 0.4 விழுக்­கா­டு­தான் அதி­கம். ஆனால் 2009 செப்டம்பரில் உல­க­ள­வில் நிதித்­துறை நெருக்­கடி ஏற்­பட்டபோது இருந்த அள­வுக்­குப் பிறகு இப்­போ­து­தான் வேலை­இல்­லா­ விகி­தம் இந்த அள­வுக்­குக் கூடியுள்ளது.

இந்த விகி­தாச்­சா­ரம் இன்­னும் அதி­க­மாக வாய்ப்பு இருப்­ப­தா­க­வும் வல்­லு­நர்­கள் சிலர் நம்­பு­கி­றார்­கள். சூழ்­நி­லை­க­ளைக் கருத்­தில் கொண்டு பார்க்­கை­யில் இதை நிரா­க­ரிக்க முடி­ய­வில்லைதான்.

கொவிட்-19 கார­ண­மாக கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்த இரண்­டா­வது காலாண்­டின்போது பொரு­ளி­யல் மிகவும் மோசமாக இறங்கி­விட்­டது.

மேற்­கொண்­டும் இனி­மேல் குறை­வ­தற்கு வாய்ப்­பில்லை என்­ப­தற்­கான சாத்­தி­யங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. இந்த ஆண்­டின் நான்­கா­வது காலாண்­டில் புதிய வேலை­கள் அதி­க­மாக உரு­வா­கும் என்­பதற்கு நல்ல அறிகுறிகள் தெரி­கின்­றன.

அடுத்த கட்­ட­மாக பொரு­ளி­யல் மேலும் திறந்து­வி­டப்­படும்போது கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­படும். அப்போது புதிய புதிய வேலை­கள் அதி­கம் உரு­வா­கும் என்று நம்ப இடமுண்டு.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக படு மோச­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருக்­கும் சேவைத் துறைக்கு ஓரளவுக்குப் பலம் கிடைக்­கக்­கூ­டிய சூழ்­நிலை வர இருக்­கிறது. அர­சாங்­கத்­தின் பல திட்­டங்­களும் புதிய வேலை­கள் உரு­வாகக் கைகொ­டுக்­கும்.

ஆனா­லும் இதில் மிகப் பெரும் சவால்­களும் தலைதூக்கி உள்ளன. அவை குறுகிய கால சவால்­களா­கவே இருக்­கும் என்­றா­லும் அவை இமாலய சவால்­க­ளா­கவே இருக்­கும் என்பது திண்ணம்.

புதி­தாக உரு­வா­கக்­கூ­டிய வேலை­கள், வேலை தேடு­வோ­ருக்குப் பொருத்­த­மாக இருக்­குமா என்­பது­தான் அந்­தச் சவால். 'எஸ்ஜி யுனைட்­டெட்' வேலை மற்­றும் தேர்ச்சித் திட்­டத்­தின் கீழ் ஆகஸ்ட் மாத முடி­வில் சுமார் 117,000 புதிய வேலை வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு தெரி­விக்கிறது. ஆனால் அவற்­றில் ஏறக்­கு­றைய 33,000 வேலை­களே எடுத்­துக்கொள்­ளப்­பட்­டன.

புதி­தாக உரு­வான வேலை­களில் மூன்­றில் இரண்டு பங்­கிற்­கும் அதி­க­மா­னவை காலி­யா­கவே இருக்­கின்­றன.

பொருத்­த­மான வேலை­களில் பொருத்­த­மான ஊழி­யர்­க­ளைச் சேர்ப்­பது என்­பது அவ்­வ­ளவு எளி­தா­ன­தல்ல. விமா­னப் போக்­கு­வ­ரத்து, பொழு­து­போக்கு, விருந்­தோம்­பல் போன்ற துறை­களில் பல வேலை­களும் காணா­மல் போய்­விட்­டன.

அதே­நேரத்தில், புதி­தாக உரு­வா­கக்கூடிய வேலை­கள் தொழில்­நுட்­பம், நிதி, மருத்­து­வம் போன்ற வேறு­பட்ட பொரு­ளி­யல் துறை­க­ளில்­தான் அதி­க­மாக இருக்­கும் என்­று தெரிகிறது.

இத்­த­கைய சூழ­லில் முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் விட்­டுக்­கொ­டுத்து நடந்­து­கொள்ள வேண்­டும் என்று அர­சாங்­கம் திரும்­பத் திரும்ப ஆலோ­சனை­களை கூறி இருக்­கிறது.

ஆனால் தங்­க­ளுக்கு எத்­த­கைய ஊழி­யர்­கள் தேவையோ அத்­த­கைய ஊழி­யர்­களை மட்­டுமே முத­லா­ளி­கள் நாடு­வது வழமை. அப்­படி யாரே­னும் கிடைக்­கா­விட்­டால்­தான் வேலை நிய­மன நடை­முறை­களை அவர்­கள் திருத்­து­கி­றார்­கள். இப்­படி வேலை­யில் சேர்க்­கப்­படும் ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்க வேண்­டிய தேவை­யும் இருக்­கும்.

முத­லா­ளி­கள் இப்­படி இருக்க, தங்­க­ளுக்கு இந்த வேலைதான் பொருத்­த­மா­னது என்று முடிவு செய்து அந்த வேலை­யைத் தேடும் போக்கே, வேலை தேடு­வோ­ரி­டம் பொதுவாகக் காணப்­ப­டு­கிறது.

அப்­ப­டிப்­பட்ட வேலை கிடைக்­க­வில்லை என்­றால்­தான் இவர்­கள் தங்­கள் பார்­வையை வேறு பக்­கம் திருப்­பு­கி­றார்­கள். இத்­த­கைய சூழல் இருப்­பதால் உரு­வா­கக்கூடிய வேலை­களில் ஊழி­யர்­களைச் சேர்க்க காலம் பிடிக்­கவே செய்­யும்.

சிங்­கப்­பூரை வட்­டார மைய­மாக மேலும் மேம்­படுத்­து­வது, மின்­னி­லக்­க­ம­யத்தை வேகப்­ப­டுத்­து­வது, மக்­க­ளின் தேர்ச்­சி­யைக் கூட்­டு­வது, இப்­போது இருப்­ப­தை­விட இன்­னும் பல­ரை­யும் உள்­ள­டக்­கக்­கூ­டிய, மீள்­தி­ற­னு­டன்­கூ­டிய பசு­மைப் பொரு­ளி­யலைச் சாதிப்­பது போன்ற திட்­டங்­க­ளைத் தீட்டி அடுத்த 10 ஆண்டு காலத்­தில் பொரு­ளி­ய­லுக்­குத் தேவை­யான உரு­மாற்றத் திட்­டங்­களில் அர­சாங்­கம் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்தி வருகிறது.

கொவிட்-19 முடிந்து அந்­தக் கிருமி இல்­லாத ஓர் உல­கம் தலை­யெ­டுக்­கும்போது இந்­தத் திட்டங்­கள் எல்­லாம் போட்­டித்­தி­ற­னைப் பொறுத்தவரை­ சிங்­கப்­பூ­ருக்கு அனு­கூ­ல­மான சூழலை ஏற்­ப­டுத்­தித் தரும் என்பது உறுதி.

இவற்றுக்குத் தோதாக ஊழியர்களும் முதலாளி களும் மாறிக்கொள்வது, இப்போதைய, எதிர்கால பெரும் சவாலைச் சமாளித்து வெற்றிகரமாக மீண்டு முன்னேறிச் செல்ல உதவிகரமாக இருக்கும்.