சிங்கப்பூர் இந்தியர்களுக்கு உதவும் வேலை ஆதரவுக் கட்டமைப்பு; சிண்டாவின் வேலைச் சந்தை

வேலை ஓய்வு பெற்­றும் ஓய்ந்­து­வி­டக்­கூ­டாது என்ற துடிப்­பு­டன் வேலை தேடும் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர் திரு­மதி அரி­ய­நாச்சி அரு­ண­கிரி (73), திரு ஜெய­ராம் நாயுடு (73) தம்­ப­தி­யர். இரா­ணு­வத்­தில் நிர்­வாக மேற்­பார்­வை­யா­ள­ரா­கப் பணி­யாற்றி ஓய்வு பெற்­ற­வர் திரு­மதி அரி­ய­நாச்சி. ஓய்வு பெற்­ற­பின்­பும் தற்­போது ஓர் உண­வ­கத்­தில் பகு­தி­நேர வேலை­யில் இருக்­கி­றார். முழு­நேர வேலை வாய்ப்­பு­களை நாடி சிண்­டா­வின் வேலை ஆத­ர­வுச் சந்­தைக்­குத் தமது கண­வர் திரு ஜெய­ரா­மு­டன் வந்­தி­ருந்­தார்.

“முடிந்­த­வரை வேலை செய்து­கொண்டே இருக்­க­வேண்­டும் என்­ப­து­தான் என் விருப்­பம். என்­னைப் போன்ற வய­தா­ன­வர்­களுக்கு இணை­யத்­தில் வேலைக்கு விண்­ணப்­பிப்­பது, இணைய வேலைச் சந்­தை­களில் பங்­கேற்­பது போன்­ற­வற்­றைப் பற்றி அதி­கம் தெரி­யாது.

இந்த நேரடி வேலைச் சந்­தை­யைப் பற்றி அறிந்­த­வு­டன் உடனே இதற்­குப் பதிவு செய்­தேன். சமை­யல், உண­வக நிர்­வா­கம் போன்ற பணி­களில் எனக்கு ஆர்­வம் உண்டு. இவ்­வகை வேலை­க­ளைத் தேடி வந்­தி­ருக்­கிறேன்,” என்­றார் திரு­மதி அரி­ய­நாச்சி.

இவ­ரைப் போலவே சிண்­டா­வின் வேலைச் சந்­தைக்கு வந்­தி­ருந்­தார் திரு பென­டிக், 42. இவர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­னால் கடந்த மாதம் தமது வேலையை இழந்­தார். ஆங்­கில ஆசி­ரி­ய­ராக முன்பு பணி­பு­ரிந்த இவர் தமக்­கேற்ற வேலை­களை நாடி வேலைச் சந்­தை­க­ளுக்­குச் சென்று வரு­கி­றார்.

“அர­சாங்­க­மும் சிண்டா போன்ற அமைப்­பு­களும் வேலை இழந்­த­வர்­க­ளுக்­குப் பல வழி­களில் உதவி வரு­கின்­றன. இது­போன்ற சிர­ம­மான கால­கட்­டத்­தில் இத்­தகைய வேலைச் சந்­தை­க­ளின் வழி நிறு­வ­னங்­களும் அமைப்­பு­களும் வேலை வாய்ப்­பு­களை மக்­களுக்­காக ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர் என்­பது உற்­சா­கத்தை அதி­க­ரிக்­கிறது,” என்­றார் திரு பென­டிக்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று விளை­வித்­தி­ருக்­கும் பொரு­ளி­யல் மந்­த­நிலை, மறு­சீ­ர­மைப்பு, வேலை நிறுத்­தங்­கள் போன்­ற­வற்­றால் பாதிக்­கப்­பட்ட சிங்­கப்­பூர் இந்­தியர்­க­ளுக்கு உதவ சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் (சிண்டா) வேலை ஆத­ர­வுக் கட்­ட­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

வேலை வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தற்கு மேல் வேலை தேட­லுக்­கான வழி­காட்­டு­தல்­க­ளை­யும் வழங்க முற்­பட்­டுள்­ளது இத்­திட்­டம். இந்த கட்­ட­மைப்பு தொடர்­பில் சிண்டா தலை­மை­ய­கத்­தில் நேற்று வேலை ஆத­ர­வுச் சந்தை நடந்­தது. இதை தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சின் வேலை நிய­மன, வேலைத்­த­குதி கழ­கத்­து­டன் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்­தது சிண்டா. இதற்கு 180க்கும் மேற்­பட்­டோர் பதிவு செய்­தி­ருந்­த­னர்.

“சிண்­டா­வின் வேலை ஆத­ர­வுக் கட்­ட­மைப்­பின் மூலம் வேலை இல்­லா­தோர், வேலை இழந்­த­வர்­கள் வாய்ப்­புப் பெறு­வர் என்று நம்­பு­கி­றோம். தம்­மி­டம் உள்ள திறன்­களும் பயிற்சி நிலை­யும் வேலை தேடு­த­லுக்­குப் பொருந்­தாத பட்­சத்­தில் சில­ருக்கு வேலை அமை­வது கடி­ன­மா­கி­யுள்­ளது. பணி சார்ந்த திறன்­களை இவர்­கள் மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும் திட்­டங்­களை முன்­வைப்­ப­தற்­காக இந்த கட்­ட­மைப்பை அமைத்­துள்­ளோம்.

“வேலை­வாய்ப்­பு­களும் அவற்­றைப் பற்­றிய விழிப்­பு­ணர்­வும் நம் இந்­திய சமூ­கத்­திற்கு எளி­தில் கிடைக்­க­வேண்­டும் என்ற நோக்­கத்­தைக் கொண்­டுள்­ளது சிண்டா. இது தொற்­றுச் சூழல் சவால்­களைக் கடந்து வர நாம் அனை­வரும் சேர்ந்து ஒரு வலு­வான சமூ­க­மா­கச் செயல்­ப­டு­வ­தன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் உறு­திப்­ப­டுத்து­கிறது.

“இதற்கு முன் ஜூலை மாதம் இணை­யம் வழி ஒரு வேலை வாய்ப்­புச் சந்­தையை நடத்­தி­னோம். அதற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தது. நிறைய பேர் வேலை சார்ந்த உத­வியை நாடி வந்­த­னர். அதற்கு அடுத்து இந்த நேரடி வேலை வாய்ப்­புச் சந்தை. இதன்­மூ­லம் இணை­யம் வழி வேலை தேடச் சிர­மப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்­ட­லாம் என்று நம்­பு­கிறோம்,” எனத் தெரி­வித்­தார் சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன்.

இந்த வேலைச் சந்­தை­யில் லிஷா, சிங்­கப்­பூர் இந்­திய உண­வ­கங்­கள் சங்­கம், ‘இடுஇ குளோ­பல் சர்­வி­சஸ்’ (e2e Global Services Pte Ltd), ‘மல­பார் கோல்ட் & டைமெண்ட்ஸ்’ (Malabar Gold & Diamonds), ‘பூன் ஹுவாட்’ (Poon Huat), ‘டேலன்ட் மார்க்­கெட் பிளேஸ்’ (Talent Marketplace) போன்ற நிறு­வ­னங்­களும் சங்­கங்­களும் கலந்­து­கொண்டு மொத்­தம் 579 வேலை­வாய்ப்­பு­களை வழங்­கின.

இதோடு, ‘ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர்’ மற்­றும் ‘ஸ்கில்ஸ்­ஃபியூச்­சர் ஆலோ­ச­னைத் திட்­டம் @ வட­மேற்கு இணைந்து வேலைப் பயிற்­சி­கள் மற்­றும் மேம்­பாடு சார்ந்த பட்­ட­றை­களை நடத்­தின. இந்த பட்­ட­றை­களில் பங்­கேற்­றோ­ருக்­குத் தனிப்­பட்ட ஆலோ­ச­னை­கள், திறன் மேம்­பாட்­டுக்­கான வளங்­கள் ஆகி­யவை வழங்­கப்­பட்­டன. பாது­காப்­பான இடை­வெ­ளி­யு­டன் நடந்த இந்த கண்­காட்­சி­யில் ஐந்து கூடங்­களில் உணவு மற்­றும் பானம், தள­வா­டங்­கள், கல்வி, தொழில்­நுட்­பம், நிர்­வா­கம் போன்ற துறை­களில் வேலை­வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட்­டன.

“வேலை நேர்­கா­ணல் நிகழ்­வு­களைச் சமூ­கத்­திற்கு நேர­டி­யா­கக் கொண்டு வரு­வ­தால் மக்­கள் வேலை­வாய்ப்­பு­க­ளை­யும் பயிற்­சி­களை­யும் பற்றி எளி­தில் தக­வல் பெற முடி­கிறது. மெய்­நி­கர் வேலைக் கண்­காட்­சி­களை அணு­கவோ இணை­யத்­தில் வேலை­க­ளுக்கு விண்­ணப்­பிக்­கவோ இய­லா­த­வர்­களுக்கு இத்­த­கைய கண்­காட்­சி­கள் பெரி­த­ள­வில் உத­வும் என்று நம்­பு­கி­றோம்.

“இந்த சவா­லான கால­கட்­டத்­தில் திறந்த மன­து­டன் வாய்ப்­பு­களை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு வேலை தேடு­ப­வர்­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் கேட்­டுக்­கொள்­கி­றோம்,” என்­றார் கழகத்தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு கில்­பெர்ட் டான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!