புதிய வேலைவாய்ப்புகளை ஏற்க தன்னம்பிக்கை முக்கியம்

நுண்­உ­யி­ரி­யல் துறை­யில் முனை­வர் பட்­டம் பெற்­றி­ருக்­கும் திரு அமர் ஹசான்­பாய் ஆராய்ச்­சிப் பணி­யில் 10 ஆண்­டு­க­ளுக்கு மேலான அனு­ப­வம் கொண்­ட­வர்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லும் நன்­யாங் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லும் ஆராய்ச்­சிப் பணி­யில் ஈடு­பட்ட இவர், கடந்­தாண்டு வேறொரு வேலை தேட முடி­வெ­டுத்­தார். மனித உடல்­ந­லப் பிரச்­சி­னை­களுக்­குத் தீர்­வு­கா­ணும் வேலை­யாக அது அமைய வேண்­டும் என்று விரும்­பி­னார்.

முந்­தை­யப் பணி­யில் எலும்பு மறு­உ­ரு­வா­கு­தல், வளர்ச்சி தொடர்­பில் முன்பு ஆராய்ச்சி செய்­து­கொண்­டி­ருந்­த­போது அதில் மிகுந்த நாட்­டம் அவ­ருக்கு இருந்­தது.

அதன் தொடர்­பில் அறுவை சிகிச்­சை­யில் உட­லில் பொருத்­தப்­படும் சாத­னங்­களை உரு­வாக்­கும் நிறு­வ­ன­மான ‘ஒஸ்­தி­யோ­போர்’ (Osteopore) பற்றி அறிய வந்து, அங்கு வேலைக்கு விண்­ணப்­பித்­தார். பொருள் தரக் கட்­டுப்­பாடு நிர்­வா­கி­யாக அவ­ருக்கு அங்கு வேலை­யும் கிடைத்­தது. செய்­ய­ ­இருக்­கும் பணிக்கு அவரைத் தயார்ப்­ப­டுத்­தும் வகை­யில், ­நி­று­வ­னம் நிபு­ணத்­துவ மாற்­றுத் திட்­டத்­தில் (பிசிபி) அவரை இணைத்­தது.

சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு வழங்­கும் இந்த பிசிபி திட்­டம், நிபு­ணர்­கள், நிர்­வா­கி­கள், மேலா­ளர்­கள், தொழில்­நுட்­பர்­கள் ஆகி­யோர் புதிய துறை­களில் வேலை வாய்ப்­பு­க­ளைப் பெற வகை­செய்­கின்­றது. புதிய வேலைக்­குத் தேவை­யான மாற்­றுத் திறன்­களை இவர்­கள் இதன் வழி கற்­றுக்­கொள்­கின்­ற­னர்.

பிசிபி திட்­டத்­தின்­கீழ், மாற்று வேலை­வாய்ப்­பு­க­ளைத் தேடு­ப­வர்­கள் சுமார் 100 வெவ்­வேறு துறை சார்ந்த வேலைப் பயிற்­சித் திட்­டங்­க­ளி­லி­ருந்து தங்­க­ளுக்­குப் பிடித்­த­தைத் தெரிவு செய்­ய­லாம்.

இத்­திட்­டத்­தின் கீழ், அமர் சுமார் ஓராண்டு கால­மாக மருத்­து­வத் தொழில்­நுட்­பப் பொறி­யா­ளர் பயிற்­சி­யில் ஈடு­பட்­டார். இவ்­வாண்டு ஏப்­ரல் மாதத்­தில் வெற்­றி­க­ர­மாக அப்­ப­யிற்­சியை முடித்து, தம் பணியை அந்­நி­று­வ­னத்­தில் மகிழ்ச்­சி­யு­டன் மேற்­கொண்டு வரு­கி­றார் மூன்று இளம் பிள்­ளை­க­ளுக்­குத் தந்­தை­யான 41 வயது அமர்.

அந்­நி­று­வ­னம் தயா­ரிக்­கும் மருத்­து­வச் சாத­னங்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்­தி­செய்­யும் விதத்­தில் உரு­வாக்­கப்­படு­வது அம­ரின் பொறுப்­பா­கும்.

“பழக்­கப்­பட்ட துறை­யில் பல ஆண்­டு­கள் இருந்­து­விட்டு புதிய துறைக்­குச் செல்­வ­தில் பதற்­றம் இருக்­கவே செய்­தது. ஆனால் என் திறன்­கள் மீது நம்­பிக்கை கொண்டு செயல்­பட்­ட­தில் எல்­லாம் நன்­றாக அமைந்­தது,” என்று தமது புதிய வேலை பய­ணத்­தைப் பற்றி பகிர்ந்­து­கொண்­டார் அமர்.

சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள் திறன்­மிக்­க­வர்­கள். ஆனால் மாற்று வேலை வாய்ப்­பு­க­ளைத் தேடும்­போது போதிய தன்­னம்­பிக்­கையை வெளிக்­காட்­டா­மல் போக வாய்ப்பு உண்டு என்று கூறிய அமர், ஏற்­கெ­னவே பெற்ற வேலை­யி­டத் திறன்­கள் மற்­றொரு துறைக்கு மாறும்­போ­தும் பயன்­படும் என்று விளக்­கி­னார். உற்­பத்­தித் துறை தமக்கு முற்­றி­லும் புதிது என்­றா­லும் புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற தீராத ஆர்­வம் அவ­ருக்கு இது­வ­ரை­யில் கைகொ­டுத்து வரு­வ­தாக அமர் சொன்­னார்.

சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்­பின் (WSG) நிபு­ணத்­துவ மாற்­றுத் திட்­டம் (PCP), திற­னுக்­கேற்ற பணி­ய­மர்த்­தும் சேவை­கள் (Career Matching Services) ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் மேல்விவ­ரம் அறிய, go.gov.sg/careeradvice7 என்ற இணை­யப்­பக்­கத்­திற்­குச் சென்று வாழ்க்­கைத்­தொ­ழில் வழி­காட்­டியைச் சந்­திக்­கப் பதிவு செய்­ய­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!