சிராங்கூன் ரோட்டில் கத்தியுடன் ஆடவர் கைது

சிராங்கூன் ரோட்டில் கத்தியுடன் ஆடவர் கைது

1 mins read
c4a7026a-5726-4c45-9ca8-c497893f64bf
-

ஆபத்தான ஆயுதத்துடன் வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தில் 24 வயது ஆடவர் ஒருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று போலிஸ் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக ஒன்றுகூடிய ஒரு சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இதர நால்வரும் கைதாகி இருக்கிறார்கள்.

எண் 525 சிராங்கூன் ரோட்டில், அக்டோபர் 8ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு 24 வயது ஆடவர் ஒருவர் வேறு ஒருவரைத் தாக்கியதாக போலிசுக்கு தகவல் கிடைத்தது.

தாக்கப்பட்டவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அக்டோபர் 9ஆம் தேதி சந்தேகப்பேர்வழி கைதானார். அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது அங்கு இதர நால்வரும் இருந்தார்கள் என்று நம்பப்படுகிறது.

அந்த நால்வரும் அக்டோபர் 8ஆம் தேதிக்கும் அக்டோபர் 10ஆம் தேதிக்கும் இடையில் சட்ட விரோதமாகக் கூடியதன் தொடர்பில் கைதாகி இருக்கிறார்கள். புலன் விசாரணை தொடர்ந்து நடப்பதாக போலிஸ் தெரிவித்தது.