ஆறு மாடி உயர மரம் விழுந்தது: ஐந்து கார்கள் சேதம்

ஆறு மாடி உயர மரம் விழுந்தது: ஐந்து கார்கள் சேதம்

1 mins read
93092454-5f07-402d-992f-5ce70a7300aa
ஆறு மாடி உயர மரம் விழுந்ததால் ஐந்து கார்கள் சேதமடைந்தன. கடும் மழையைத் தொடர்ந்து மரம் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: வான் பாவ் -

சிம்ஸ் டிரைவில் புளோக் 41க்குப் பக்கத்தில் இருக்கும் திறந்த வெளி கார் பேட்டையில், கடும் மழையைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆறு மாடி உயரமான ஒரு மரம் விழுந்ததில் குறைந்தபட்சம் ஐந்து கார்கள் சேதமடைந்துவிட்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

கீழே விழுந்த மரம் சுமார் 35 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்படுகிறது. சேதமடைந்த கார்களில் திரு சியா டுக் சூன், 58, என்பவர் நிறுத்திவைத்திருந்த கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சியும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.