வீட்டிலிருந்தே வாழ்க்கைத்துணையை நாடும் சேவை

பர­ப­ரப்­பான வேலை-வாழ்க்கை சூழல், நேர­மின்மை, புதிய நபர்­க­ளைச் சந்­தித்­துப் பழக போதிய வாய்ப்­பு­கள் அமை­ய­வில்லை.

இப்­படி சில நண்­பர்­கள் இன்­னும் திரு­மணம் செய்­து­கொள்­ளா­த­தற்கு இவற்­றைக் கார­ண­மா­கக் கூறு­வதை 32 வயது திரு­மதி அனிதா பிர­வின் உணர்ந்­தார். தற்­போ­தைய கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளின் நில­வ­ர­மும் சாத­க­மாக இல்லை. ‘டின்­டர்’ போன்ற தளங்­களில் பெரும்­பா­லா­னோர் மற்ற இனத்­த­வர்களாக இருப்­ப­தால் போதிய இந்­தி­யர்­கள் இடம்­பெ­றா­த­தும் ஒரு குறை­யாக இருப்­ப­தாக நண்­பர்­கள் கூறி­னர்.

வாழ்க்­கைத் துணை­யைத் தேடும்­போது, ஒரு­வ­ரின் பண்­பு­க­ளுக்கு அப்­பால் வெளித்­தோற்­றத்­துக்கு இத்­த­கைய தளங்­கள் அதிக முக்­கி­யத்­து­வம் கொடுப்­பது அனி­தா­வுக்கு ஏற்­பு­டை­ய­தா­கத் தோன்­ற­வில்லை. இது குறித்து ஏதா­வது செய்ய வேண்­டும் என்ற முயற்­சி­யில் உதித்­த­து­தான், ‘மேச்­பாக்ஸ்­எஸ்­ஜிஐ’ (matchboxsgi) என்ற வாழ்க்­கைத் துணை­யைத் தேடும் இணை­யச் சேவை. இது ‘இன்ஸ்­ட­கி­ராம்’ மற்­றும் ‘ஃபேஸ்புக்’ தளங்­களில் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஜூலை மாதத்­தில் அனிதா தொடங்­கிய இச்­சே­வைக்கு இது­வரை 100க்கும் மேற்­பட்­டோர் பதி­வு­செய்­துள்­ள­னர். சேவைக்­குப் பதிவு செய்­வோர் தங்­க­ளது சொந்த விவ­ரங்­க­ளைப் பதி­வு­செய்­வ­தோடு தங்­க­ளது பின்­னணி, விருப்­பங்­கள், திரு­ம­ணத்­திற்­குப் பிறகு உள்ள எதிர்­பார்ப்பு ­கள் போன்­றவை குறித்த வினாக்­க­ளைப் பூர்த்தி செய்ய வேண்­டும். இதற்குக் குறைந்­தது 25 நிமி­டங்­கள் ஆகும்.

கொடுக்­கப்­படும் வினாக்­க­ளைப் பொறுத்து, தகுந்த துணை­யைத் தேடும் பணி தொடங்­கு­கிறது. பொருத்­த­மான ஜோடி கிடைத்­த­தும் அந்­ந­ப­ரின் குணா­தி­ச­யங்­கள், விருப்­பங்­கள் போன்ற விவ­ரங்­கள் கொண்ட மின்­னஞ்­சல் அனுப்­பப்­ப­டு­கிறது.

ஆனால் அதில் பெயர்­களோ தொடர்பு­ கொள்­வ­தற்­கான விவ­ரங்­களோ இடம்­பெ­றாது. அப்­படி இரு தரப்­பி­ன­ரும் மேற்­கொண்டு பழக சம்­ம­தித்­தால் மட்­டுமே அவர்­களை டெலி­கி­ராம் செயலி வழி இணைக்­கும் முயற்சி மேற்­கொள்­ளப்­படும். பொருத்­தம் பார்த்த நப­ரு­டன் மேற்­கொண்டு பழ­க­வேண்­டும் அல்­லது நேர­டி­யாக சந்­திக்க வேண்­டும் என்ற நிபந்­தனை, சேவை­யைப் பயன்­ப­டுத்­து­வோ­ருக்கு இல்லை.

“தனி­ந­பர் தக­வல் பாது­காப்பைக் கருதி, அவ­ர­வர் தொடர்­பு­கொள்­ளும் விவ­ரங்­கள் ஜோடி­க­ளுக்கு தெரி­யா­மல் இருக்­கும். வருங்­கால வாழ்க்­கைத் துணை­யைச் சந்­தித்து திரு­ம­ணம் புரிந்­து­கொள்ள விரும்­பும் இந்­தி­யர்­க­ளுக்­காக குறிப்­பாக இச்­சே­வை­யைத் தொடங்­கி­னேன்,” என்று தெரி­வித்­தார் சுகா­தார தொழில்­நுட்ப நிறு­வன ஆராய்ச்­சி­யா­ள­ராக பணி­யாற்­றும் அனிதா.

எதிர்­கா­லத்­தில் திரு­ம­ணம் புரிந்­து­கொள்ள எண்­ணம் கொண்­ட­வர்­களை மட்­டும் இணைப்­ப­து­தான் இச்­சே­வை­யின் நோக்­க­மென்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

“பாரம்­ப­ரிய முறை­யில் பெற்­றோர், உற­வி­னர் பொருத்­தம் பார்ப்­பதை விரும்­பாத நப­ருக்கு இச்­சேவை ஏற்­ற­தாக விளங்­கும். ஏனெ­னில், துணை­யைத் தேட இதில் அவர்­க­ளுக்கு முழு சுதந்­தி­ரம் கிடைக்­கிறது,” என்­றார் அவர்.

இரு தரப்­பி­ன­ரும் அறி­மு­க­மா­ன­தி­லி­ருந்து அவர்­க­ளது உற­வில் ஏதா­வது பிரச்­சினை அல்­லது முன்­னேற்­றம் உள்­ளதா என்­பதை அறிய அனிதா அவர்­க­ளு­டன் அவ்­வப்­போது தொடர்­பு­கொண்டு நில­வ­ரத்தை விசா­ரிக்­க­வும் செய்­கி­றார்.

அடுத்த கட்­ட­மாக உண­வ­கங்­க­ளு­டன் இணைந்து, ஜோடி­கள் உண­வ­கத்­தில் சந்­தித்­துப் பேசி, உணவு உண்­ணும் வாய்ப்­பினை உரு­வாக்­கும் சாத்­தி­யத்தை இவர் ஆராய்ந்து வரு­கி­றார்.

இச்­சேவை தொடங்கி சில மாதங்­கள் மட்­டுமே ஆவ­தால் இன்­னும் திரு­ம­ணம் வரை சென்ற ஜோடி­கள் இது­வரை இல்லை என்று கூறிய அனிதா, கூடிய விரை­வில் அதனை எதிர்­பார்க்­க­லாம் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார். தற்­போது தாம் வழங்­கும் இச்­சே­வைக்­குக் கட்­ட­ணம் எது­வும் இல்லை.

தற்­போது இம்­மு­யற்­சிக்கு பங்­கா­ளி­களை­யும் ஆத­ர­வா­ளர்­க­ளை­யும் திரட்­டும் பணி­யில் அனிதா ஈடு­பட்டு வரு­கி­றார்.

முத­லில் இச்­சே­வை­யைப் பற்றி இன்ஸ்­ட­கி­ராம் வழி அறிய வந்­த­போது, தக­வல்­களைப் பாது­காப்­பு­டன் கொடுக்­க­லாமா என்ற ஐயம் நில­வி­ய­தாக சொந்­தத் தொழில் நடத்­தும் 27 வயது குமாரி செ.மோனிகா சரண்யா தெரி­வித்­தார்.

ஆனால் பிற­ரி­டம் விசா­ரித்து சேவை­யின் நம்­ப­கத்­தன்­மையை உறு­தி­செய்த பிறகு, அவர் சேவைக்­குப் பதி­வு­செய்­தார். கடந்த மாதம் இச்­சே­வைக்­குப் பதிவு செய்த இவ­ருக்கு, வாழ்க்­கைத் துணை­யாக மூவர் பரிந்­துரைக்கப்­பட்­டுள்­ள­தாக சொன்­னார்.

“மற்ற துணை தேடும் தளங்­களில், திரு­ம­ணம் புரிய விரும்­பா­த­வர்­களும் அத்­த­கைய சேவையை அதி­கம் பயன்­ப­டுத்­து­வ­துண்டு. ஆனால் இச்­சே­வை­யைப் பயன்­படுத்­து­வோர் பெரும்­பா­லும் திரு­ம­ணம் புரிய எண்­ணம் கொண்­டுள்­ள­வர்­க­ளாக கரு­த­லாம். ஏனெ­னில் பதிவு செய்­வோர் நேரத்தை ஒதுக்கி சுமார் 30 கேள்­வி­களுக்­குப் பதி­ல­ளிக்க வேண்­டும்,” என்­றார் மோனிகா.

ஓர் இந்­தி­ய­ரைத் திரு­ம­ணம் செய்­ய விருப்­பம் கொண்­டுள்ள மோனிகா, அத்­தே­டு­த­லுக்கு இச்­சேவை வழி­வ­குக்­கிறது என்­றும் ஒரு­வ­ரின் குணா­தி­ய­சங்­க­ளைப் பற்றி சற்று ஆழ­மா­கத் தெரிந்­து­கொள்ள முடி­வ­தால் இச்­சேவை தமக்குப் பிடித்­தி­ருக்­கிறது என்­றும் குறிப்­பிட்­டார்.

சில இளை­யர்­கள் வேலை­யில் அதிக ஈடு­பாடு காட்டி ஒரு நல்ல பொரு­ளா­தார நிலையை எட்­டும் வரை­யில் வாழ்க்­கைத் துணைத் தேடலை ஒத்­தி­வைத்­தி­ருக்­க­லாம். அவர்­க­ளைப் போன்­ற­வர்­க­ளுக்கு இச்­சேவை பேரு­த­வி­யாக விளங்­கு­கிறது என்று தெரி­வித்­தார் இச்­சே­வை­யைப் பயன்­ப­டுத்­தும் மற்­றொ­ரு­வ­ரான 32 வயது திரு ஜா.பிரேம் ஆனந்த்.

பொறி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றும் இவர், நண்­பர்­க­ளின் ஆலோ­ச­னை­யில் இச்­சே­வை­யில் இணைந்­தார். சேவை­யின் சில அம்­சங்­கள் அவ­ரைக் கவர்ந்­துள்­ளன.

“பெற்­றோ­ரின் ஈடு­பா­டின்றி முத­லில் இரு தரப்­பி­ன­ரும் மனம்­விட்டு பேசு­வ­தற்­கான சந்­தர்ப்­பம் கிடைக்­கிறது. சேவை மூலம் பரிந்­து­ரைக்­கப்­படும் நபர்­களும் நமது விருப்­பங்­க­ளைக் கருத்­தில் கொண்டு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­கள். சேவைக்­குப் பதி­வு­செய்­வோர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆர்­வ­மும் காட்டி நேர­மும் ஒதுக்­கி­னால், பலனை எதிர்­பார்க்­க­லாம் என்று நம்­பு­கி­றேன்,” என்­றார் பிரேம்.

வேலை­யி­டத்­தில் தனக்­கென வகுத்­துக்­கொண்ட இலக்­கு­களை முத­லில் அடைந்­திட வேண்­டும் என்­ப­தில் மும்­மு­ர­மாக இருந்து வரும் 30 வயது தொழில்­நுட்ப ஆய்­வா­ளர் ரா.விக்­ர­மன், இன்­னும் வாழ்க்­கைத் துணை­யைத் தேடும் நட­வ­டிக்­கை­யில் இறங்­கவில்லை என்­றார்.

இருப்­பி­னும், அந்த தேட­லில் இறங்க முடி­வெ­டுத்­தால் இச்­சே­வையை அவர் பயன்­ப­டுத்­தக்­கூ­டும் என்­றார்.

“சிங்­கப்­பூர் இந்­திய சமூ­கத்­தி­ன­ரி­டையே பொருத்­த­மா­ன­வ­ரைத் தேடும் பணியை இத்­த­ளம் சுல­ப­மாக்­கி­யுள்­ளது. அதோடு கேள்வி, பதில் அடிப்­ப­டை­யில் பொருத்­த­மா­ன­வர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தால் அவ­ர­வர் எதிர்ப்­பார்ப்­பு­க­ளைத் தெரிந்­து­கொள்ள முடி­கிறது. இது இயல்­பாக ஒரு­வ­ரி­டம் அறி­மு­க­மா­கும் அடித்­த­ளத்தை அமைத்து தரு­கிறது,” என்று சொன்­னார் விக்­ர­மன்.

இச்­சே­வை­யைப் பற்றி மேல் விவ­ரம் அறிய விரும்­பு­வோர், https://www.instagram.com/matchboxsgi/ என்ற இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­திற்­குச் செல்­ல­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!